4ஜி ஆதரவு கொண்ட இன்டெக்ஸ் அக்வா A4 விற்பனைக்கு அறிமுகம்

Ads

இந்தியாவைச் சேர்ந்த இன்டெக்ஸ் நிறுவனம் ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளத்தில் செயல்படும் 4ஜி வோல்ட்இ ஆதரவு கொண்ட இன்டெக்ஸ் அக்வா A4 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது.

இன்டெக்ஸ் அக்வா A4

பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள இன்டெக்ஸ் அக்வா A4 ஸ்மார்ட்போன் 4 அங்குல WVGA டிஸ்பிளேவுடன் 480 x 800 பிக்சல் தீர்மானத்தை கொண்டதாக விளங்குகின்றது.. 1.3GHz குவாட்கோர் சிப் செட் உடன் இணைந்த 1GB ரேம் பெற்று 8GB வரையிலான உள்ளடங்கிய மெம்மரி பெற்றிருப்பதுடன் கூடுதலாக சேமிப்பு வசதி பெற மைக்ரோ எஸ்டி அட்டை 64GB வரை பயன்படுத்தலாம்.

கேமரா பிரிவில் பின்புறத்தில் 5MP வழங்கப்பட்டு முன்புறத்தில்  2MP செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்ப்புகளுக்கு வழங்கப்பபடுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 4G LTE, VoLTE, Wi-Fi, பூளூடுத் ஜிபிஎஸ் மற்றும் மைக்ரோ யூஎஸ்பி போன்றவை இடம்பெற்று 1750mAh திறன் கொண்ட பேட்டரியால் இயக்கப்படுகின்றது. அக்வா A4 ஸ்மார்ட்போன் ஆஃப்லைன் வழியாக மட்டுமே ரூபாய் 4,199 விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது.