இன்டெக்ஸ் டர்போ 4ஜி ஃபீச்சர் போன் அறிமுகம்.!

Ads

இந்திய சந்தையில் 4ஜி மீதான மோகம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதனை ஒட்டி இந்தியாவின் இன்டெக்ஸ் நிறுவனம் இன்டெக்ஸ் டர்போ 4ஜி ஃபீச்சர் போன் உள்பட 8 மொபைல்களை அறிமுகம் செய்துள்ளது.

இன்டெக்ஸ் டர்போ 4ஜி போன்

இந்திய சந்தையில் ஜியோ நிறுவனம் ஃபீச்சர் மொபைலை ரூ. 1500  டெபாசிட் கட்டணத்துடன் இலவசமாக அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில் இதே போன்ற மொபைலை இன்டெக்ஸ் வெளியிட உள்ளது.

இந்தியாவின் 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியாவின் 20 ஆண்டுகால பாரம்பரியமிக்க இன்டெக்ஸ் நிறுவனம் ரூ.700 முதல் ரூ. 1500 விலைக்குள் 2ஜி சேவை பெற்ற 8 மொபைல்கள் உள்பட கூடுதலாக ஒரு ஸ்மார்ட் ஃபீச்சர் மொபைலை டர்போ பிளஸ் 4ஜி என்ற பெயரில் வெளியிட்டுள்ளது.

இன்டெக்ஸ் நவரத்தனா சீரிஸ்

நவரத்தனா சீரிஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள டர்போ சீரிஸ், ஈக்கோ சீரிஸ் மற்றும் அல்ட்ரா சீரிஸ் என மூன்று பிரிவுகளில் மொத்தம் 8 மொபைல்கள் 2ஜி சேவையில் ரூ.700 முதல் ரூ.1500 விலையில் அமைந்துள்ளது.

இன்டெக்ஸ் டர்போ+ 4ஜி ஃபீச்சர் போன்

ஜியோபோனுக்கு எதிராக எந்த நெட்வொர்க்கும் பயன்படுத்தும் வகையில் 2.4 அங்குல QVGA திரையுடன் 512 எம்பி ரேம் பெற்றதாக கெய் ஓஎஸ் கொண்டு இயக்கப்படுகின்ற இதில் 2000mAh பேட்டரி உடன் 2 மெகாபிக்சல் விஜிஏ கேமரா பொருதந்தப்பட்டுள்ளது.

இன்டெக்ஸ் ஈக்கோ சீரிஸ்

ஈக்கோ 102+ 2ஜி சேவையுடன் கூடிய மொபைலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இதில் 800mAh பேட்டரி கொண்டு இயக்கப்பட்டு வயர்லெஸ் எஃப்எம் ரேடியோ மற்றும் கேமரா உள்ளது.00 தொடர்புகள் வரை சேமிக்கும் திறனை பெற்றுள்ளது.

ஈக்கோ 106+ 2ஜி சேவையுடன் கூடிய மொபைலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இதில் 1000mAh பேட்டரி கொண்டு இயக்கப்பட்டு வயர்லெஸ் எஃப்எம் ரேடியோ, 32ஜிபி மெமரி கார்டு வசதி மற்றும் கேமரா உள்ளது. 500 தொடர்புகள் வரை சேமிக்கும் திறனை பெற்றுள்ளது.

ஈக்கோ செல்ஃபீ 2ஜி சேவையுடன் கூடிய மொபைலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இதில் 1800mAh பேட்டரி கொண்டு இயக்கப்பட்டு வயர்லெஸ் எஃப்எம் ரேடியோ, 32ஜிபி மெமரி கார்டு வசதி மற்றும் ஃபிளாஷ் வசதியுடன் கூடிய டூயல் கேமரா உள்ளது. 22 இந்திய மொழிகள் உள்பட 1000 தொடர்புகள் வரை சேமிக்கும் திறனை பெற்றுள்ளது.

இன்டெக்ஸ் டர்போ சீரிஸ்

டர்போ ஷைன் மொபைலில் 2ஜி சேவையுடன் கூடிய மொபைலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இதில் 2.4 அங்குல திரையுடன், 1400mAh பேட்டரி கொண்டு இயக்கப்பட்டு வயர்லெஸ் எஃப்எம் ரேடியோ, 32ஜிபி மெமரி கார்டு வசதி மற்றும் கேமரா உள்ளது. 22 இந்திய மொழிகள் உள்பட 2000 தொடர்புகள் வரை சேமிக்கும் திறனை பெற்றுள்ளது.

டர்போ செல்ஃபீ மொபைலில் 2ஜி சேவையுடன் கூடிய மொபைலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இதில் 2.4 அங்குல திரையுடன், 1800mAh பேட்டரி கொண்டு இயக்கப்பட்டு வயர்லெஸ் எஃப்எம் ரேடியோ, 32ஜிபி மெமரி கார்டு வசதி மற்றும் ஃபிளாஷ் வசதியுடன் கூடிய டூயல் கேமரா உள்ளது. 22 இந்திய மொழிகள் உள்பட 2000 தொடர்புகள் வரை சேமிக்கும் திறனை பெற்றுள்ளது.

இன்டெக்ஸ் அல்டரா சீரிஸ்

அல்ட்ரா 2400+ மொபைலில் 2ஜி சேவையுடன் கூடிய மொபைலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இதில் 2.4 அங்குல திரையுடன், 2400mAh பேட்டரி கொண்டு இயக்கப்பட்டு வயர்லெஸ் எஃப்எம் ரேடியோ, 64ஜிபி மெமரி கார்டு வசதி மற்றும் கேமரா உள்ளது. 22 இந்திய மொழிகள் உள்பட 2000 தொடர்புகள் வரை சேமிக்கும் திறனை பெற்றுள்ளது.

அல்ட்ரா செல்ஃபீ மொபைலில் 2ஜி சேவையுடன் கூடிய மொபைலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இதில் 2.8 அங்குல திரையுடன், 3000mAh பேட்டரி கொண்டு இயக்கப்பட்டு வயர்லெஸ் எஃப்எம் ரேடியோ, 64ஜிபி மெமரி கார்டு வசதி மற்றும் ஃபிளாஷ் வசதியுடன் கூடிய டூயல் கேமரா உள்ளது. 22 இந்திய மொழிகள் உள்பட 2000 தொடர்புகள் வரை சேமிக்கும் திறனை பெற்றுள்ளது.

இன்டெக்ஸ் லயன்ஸ் G10 2ஜி ஃபீச்சர் மொபைலில் 2.4 அங்குல டிஸ்பிளே பெற்றிருப்பதுடன் 1450mAh திறன் பெற்ற பேட்டரியுடன் 64ஜிபி மெமரி கார்டு வசதி மற்றும் கேமரா இடம்பெற்றுள்ளது.

2ஜி சேவை பெற்ற 8 மொபைல்களின் விலை ரூ.700 முதல் ரூ.1500 வரை விலையில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. ஆனால் 4ஜி ஆதரவு பெற்ற இன்டெக்ஸ் 4ஜி மொபைல் விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை.

Comments

comments