ரூ.6999 விலையில் நோக்கியா 2 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்தது

Ads

இந்தியாவில் ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா 2 ஸ்மார்ட்போன் ரூ.6,999 விலையில் விற்பனைக்கு நாளை முதல் கிடைக்க உள்ளது.

நோக்கியா 2 ஸ்மார்ட்போன்

அதிகபட்சமாக இரண்டு நாட்கள் வரை தாக்குப்பிடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள 4100mAh பேட்டரி கொண்ட நோக்கியா 2 போன் நவம்பர் 24ந் தேதி முதல் அனைத்து முன்னணி மொபைல் ஸ்டோர்களில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

டிசைன் & டிஸ்பிளே

பாலிகார்பனேட் மற்றும் 6000 சீரிஸ் அலுமினிய சட்டம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கருவியில் காப்பர் பிளாக், ப்ரீயட் பிளாக் மற்றும் ப்ரியட் வெள்ளை ஆகிய மூன்று நிறங்களை கொண்டுள்ளது.

5 அங்குல ஹெச்டி 720×1280 பிக்சல் LTPS திரையை பெற்றுள்ள நோக்கியா 2 மொபைல் போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு அம்சத்துடன் வந்துள்ளது.

பிராசெஸர் & ரேம்

ஆண்ட்ராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளத்தை கொண்டு இயக்கப்படுகின்ற நோக்கியா 2 போனில் 1.2GHz பிராசெஸருடன் கூடிய குவால்காம் ஸ்னாப்டிராகன் 212 SoC சிப்செட் உடன் 1ஜிபி ரேம் உடன் 8ஜிபி உள்ளடக்க சேமிப்பை பெற்றிருப்பதுடன் மைக்ரோ எஸ்டி அட்டை  கொண்டு 128GB வரை சேமிப்பை அதிகரிக்கலாம்.

கேமரா துறை

கேமரா துறையில் தொடக்கநிலை சந்தைக்கு ஏற்ற அம்சங்களை பெற்ற இந்த போனில் ஆட்டோஃபோகஸ் உடன் எல்இடி ஃபிளாஷ் பெற்ற 8 மெகாபிக்சல் சென்சார் கொண்டிருப்பதுடன், முன்புறத்தில் செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளை எதிர்கொள்ள 5 மெகாபிக்சல் சென்சார் இணைக்கப்பட்டுள்ளது.

பேட்டரி

இரண்டு நாட்கள் வரை தாக்குப்பிடிக்கும் திறன் பெற்ற 4100mAh பேட்டரியை மூலம் நோக்கியா 2 ஸ்மார்ட்போன் இயக்கப்படுகின்றது.

மற்றவை

இந்த ஸ்மார்ட்போனில் கூடுதல் விருப்பங்களாக 4G வோல்ட்இ, Wi-Fi 802.11 b/g/n,ப்ளூடூத் v4.1, GPS/ A-GPS, எஃப்எம் ரேடியோ, மைக்ரோ-யூஎஸ்பி, மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் ஆகியவற்றை பெற்றுள்ளது.

நோக்கியா 2 விலை

ரூ.6,999 விலையில் விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ள நோக்கியா 2 ஸ்மார்ட்போன் அனைத்து முன்னணி மொபைல் போன் ரீடெயிலர்களிடமும் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

Comments

comments