இந்தியாவில் நோக்கியா 8 ஸ்மார்ட்போன் ரூ.36,999 விலையில் அறிமுகம்

புதிய நோக்கியா 8 ஸ்மார்ட்போன் ரியர் டூயல் கேமரா வசதியுடன் 5.3 அங்குல திரையுடன் அசத்தலான பல்வேறு வசதிகளுடன் வந்துள்ளது.

Ads

வருகின்ற அக்டோபர் 14 முதல் புத்தம் புதிய நோக்கியா 8 ஸ்மார்ட்போன் ரியர் டூயல் கேமரா வசதியுடன் 5.3 அங்குல திரையுடன் அசத்தலான பல்வேறு வசதிகளுடன் கிடைக்க உள்ளது.

நோக்கியா 8

இந்தியாவில் நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 மொபைல்களை தொடர்ந்து மிகவும் நவீனத்துவமான வசதிகளை கொண்டதாக பின்புறத்தில் டூயல் கேமரா வசதியுடன் நோக்கியா 8 விற்பனைக்கு அக்டோபர் 14ந் தேதி முதல் கிடைக்க உள்ளது.

டிசைன் & டிஸ்பிளே

மிக நேர்த்தியான டிசைனை பெற்றுள்ள இந்த ஸ்மார்ட்போனில் பின்புறத்தில் வழங்கப்பட்டுள்ள செங்குத்தான இரட்டை கேமரா பெற்றதாக நீலம், காப்பர், டெம்பர்ட் நீலம் மற்றும் ஸ்டீல் ஆகிய நிறங்களுடன் 5.3 அங்குல QHD ஐபிஎஸ் 2K ரீசொல்யூசன் பெற்றதாக கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு அம்சத்துடன் கூடியதாக வந்துள்ளது. அதிகபட்சமாக பிரைட்னஸ் 700 nits வரை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

பிராசஸர் & ரேம்

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் பயன்பாட்டில் உள்ள உயர்ரக சிப்செட் மாடலான குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 பிராசஸருடன் 4ஜிபி ரேம் பெற்று 64ஜிபி உள்ளடங்கிய சேமிப்புடன் மைக்ரோ எஸ்டி அட்டைக்கான ஸ்லாட் அதிகபட்சமாக 256 ஜிபி வரை நீட்டிக்கலாம்.

கேமரா துறை

ஒளியியல் துறைக்காக பிரத்தியேகமாக கார்ல் ஜெய்ஸ் பிராண்டின் செங்குத்தான 13 மெகாபிக்சல் இரட்டை கேமரா வழங்கப்பட்டுள்ளது. ஆர்ஜிபி மற்றும் மோனோக்ரோம் படங்களை பெறும் வகையில் OIS, PDAF ஆதரவு, f/2.0 போன்றவற்றினை கொண்டதாக வந்துள்ளது.
செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளை பெறும் வகையில் ஃபிளாஷ், PDAF ஆதரவு, f/2.0 ஆகியவற்றின் ஆதரவினை பெற்ற 13 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

பேட்டரி

ஆண்ட்ராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளத்தினை அடிப்படையாக கொண்டதாக வந்துள்ள நோக்கியா 8 ஸ்மார்ட் போன் குவால்காம் க்வீக்சார்ஜ் 3.0 அம்சத்துடன் 3090mAh பேட்டரி கொண்டு இயக்கப்படுகின்றது.

மற்றவை

IP54 ஸ்பிளாஷ்ப்ரூஃப் தரச்சான்றிதழ், 3 மைக்ரோபோன்கள், OZO ஆடியோ மற்றும் 360 டிகிரி கோண சுற்றுபுறத்தில் சப்தம் வெளிப்படுத்தும் வகையில் வந்துள்ளது. 4G LTE, யூஎஸ்பி Type-C போர்ட், 3.5mm ஆடியோ ஜாக், வை-ஃபை, மற்றும் ப்ளூடூத் 5.0 பெற்றதாக வந்துள்ளது.

விலை

இந்திய சந்தையில் நோக்கியா 8 ஸ்மார்ட்போன் விலை ரூ.36,999 ஆகும். ஆன்லைனில் அமேசான் இந்தியா தளத்திலும், ஆஃப்லைனில் க்ரோமா, ரிலையன்ஸ், சங்கீதா மொபைல்ஸ், பூர்வீகா மற்றும் பிக்.சி ஆகியவற்றில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

நோக்கியா 8 நுட்ப விபரங்கள்
வசதிகள் நோக்கியா 8
டிஸ்பிளே 5.3 இன்ச் குவாட் ஹெச்டி
பிராசஸர் குவால்காம் 835 SoC
ரேம் 4GB
சேமிப்பு 64GB
பின் கேமரா 13MP டூயல் கார்ல் ஜேய்ஸ் கேமரா
முன் கேமரா 13MP
ஓஎஸ் ஆண்ட்ராய்டு 7.1.1
பேட்டரி 3090mAh
ஆதரவு இருசிம், 4G VoLTE, புளூடுத், ஜிபிஎஸ், வை-ஃபை
விலை ரூ. 36,999

Comments

comments