வோடபோன் வழங்கும் லாவா இலவச பீச்சர் போன் சலுகை விபரம்

ரூ.900 வரை கேஸ்பேக் சலுகையை வோடபோன் சிம் பயனாளர்கள் மற்றும் புதிய லாவா மொபைல் போன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றது.

Ads

வோடபோன் தொலைத்தொடர்பு நிறுவனம் லாவா மொபைல் தயாரிப்பாளருடன் இணைந்து சிறப்பு கேஸ்பேக் சலுகையை லாவா ஃபீச்சர் ரக மொபைல் மாடல்களுக்கு வழங்குகின்றது.

வோடாபோன்-லாவா

 

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக விளங்கும் வோடபோன் ரூ.900 வரை கேஸ்பேக் சலுகையை தனது புதிய வாடிக்கையாளர் மற்றும் பழைய வாடிக்கையாளர் என இருவருக்கும்  லாவா மொபைல் பயனாளர்களுக்கு வழங்குகின்றது.

இந்நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற லாவா கேப்டன் N1 ஃபீச்சர் போன் முதல் மற்ற மாடல்களுக்கு சிறப்பு சலுகையாக ரூ.900 வரை கேஸ்பேக்கை ரூ.100 அல்லது அதற்கு மேற்பட்ட ரீசார்ஜ்களை செய்யும் பட்சத்தில் அதிகபட்சமாக 50 ரூபாய் கேஸ்பேக்கை 18 மாதங்களுக்கு வழங்குவதனால் மொத்தம் 900 ரூபாய் வரை வழங்குகின்றது.

இந்த சிறப்பு சலுகை புதிய மற்றும் பழைய வோடபோன் சிம் பயனாளர்களுக்கு பொருந்தும் இந்த சலுகை புதிய லாவா ஃபீச்சர் போன் வாங்கும் அனைவருக்கும் பொருந்தும் என அதிகார்வப்பூர்வமாக அறிவித்துள்ள இந்த சலுகை அக்டோபர் 31ந் தேதி வரை மட்டுமே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.1500 திரும்ப பெறதக்க வகையிலான மதிப்பில் இலவசமாக ஜியோபோன் அறிமுகம் செய்துள்ளது. ஏர்டெல் நிறுவனம் ரூ.2500 விலையுள்ள மொபைலை வெளியிட உள்ள நிலையில், இதே வரிசையில் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய நிறுவனங்களும் விரைவில் இணைய உள்ளது.

Comments

comments