இந்தியாவில் சியோமி ரெட்மி 5 அறிமுக தேதி விபரம் வெளியானது

வருகின்ற பிப்ரவரி 14ந் தேதி, இந்தியாவில் சியோமி நிறுவனத்தின்  சியோமி ரெட்மி 5 மற்றும் சியோமி ரெட்மி 5 பிளஸ் ஆகிய இரு ஸ்மார்ட்போன்கள் வெளியாக வாய்ப்புகள் உள்ளது. இந்த வருடத்தின் சியோமி நிறுவனத்தின் முதல் அறிமுக மொபைலாகும்.

சியோமி ரெட்மி 5

இந்த வருடத்தின் முதல் ஸ்மார்ட்போன் மாடலாக சியோமி அறிமுகம் செய்ய உள்ள ரெட்மி 5 மற்றும் ரெட்மி 5 பிளஸ் ஆகியவற்றை விற்பனைக்கு 14ந் தேதி வெளியிட உள்ளது.

டிசைன் & டிஸ்பிளே

Redmi 5 ஆனது 5.7 அங்குல முழு ஹெச்டி மற்றும் Redmi 5 Plus ஆனது 5.99 அங்குல முழு HD + (1080 × 2160 பிக்சல்கள்) காட்சி 18: 9 விகிதத்துடன் கூடியதாக உள்ளது. ரெட்மி 5 கருவி 2.0GHz ஆக்டோ-கோர் 450 உடன் இணைந்துள்ளது ரெட்மி 5 பிளஸ் கருவி 2.0GHz Octa-core Snapdragon 625 SoC உடன் இணைந்து Adreno 506 ஜி.பீ.யூ உடன் இணைந்துள்ளது.

பிராசெஸர் &ரேம்

இந்த ரெட்மி 5 ஸ்மார்ட்போனில் 2ஜிபி 3 ஜிபி மற்றும் 4 ஜிபி ரேம் உள்ளது. 2ஜிபி ரேமில் 16ஜிபி உள் சேமிப்பு, 3 ஜிபி ரேமில் 32 ஜிபி உள் சேமிப்பு மற்றும் 4 ஜிபி ரேமில் 64 ஜிபி உள் சேமிப்புகளில் இது தொடங்கப்பட்டது.

இந்த ரெட்மி 5 பிளஸ் ஸ்மார்ட்போனில் 3 ஜிபி மற்றும் 4 ஜிபி ரேம் உள்ளது. 2GB/ 3GB/ 4GB மற்றும் 4 ஜிபி ரேமில் 64 ஜிபி உள் சேமிப்புகளில் இது தொடங்கப்பட்டது.

கேமரா

ஆட்டோபோகஸ் உடன் கூடிய 12 மெகாபிக்சல் சென்ஸார் கேமரா பின்புறத்தில் வழங்கப்பட்டுள்ளது. செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளை எதிர்கொள்ள 5 மெகாபிக்சல் சென்ஸார் கேமரா முன்புறத்தில் உள்ளது.

பேட்டரி

இது 4,000mAh பேட்டரி கொண்டுள்ளது. இது MIUI 9 உடன் Android 7.1 நௌகட் மென்பொருள் கொண்டதாக இயங்குகிறது.

வருகின்ற பிப்ரவரி 14ந் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள ரெட்மி 5 மொபைல் போன் விலை ரூ.8100 தொடக்க விலையில் வெளியிடப்பட உள்ளது.

Recommended For You