சியோமி ரெட்மி 5, ரெட்மி 5 பிளஸ் டிசம்பர் 7ந் தேதி அறிமுகம்

Ads

வருகின்ற டிசம்பர் 7ந் தேதி அதிகார்வப்பூர்வமாக சீனாவில் ரெட்மி வரிசையில் அடுத்த மாடலாக சியோமி ரெட்மி 5, சியோமி ரெட்மி 5 பிளஸ் ஆகிய இரு ஸ்மார்ட்போன்களும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

சியோமி ரெட்மி 5, ரெட்மி 5 பிளஸ்

சமீபத்தில் வெளியாகியுள்ள டீசர் மற்றும் இணையத்தில் கசிந்த விபரங்களின் அடிப்படையில் சில நுட்ப விபரங்களை தொடர்ந்து அறிந்து கொள்ளலாம்.

மிக அகலமான காட்சி திரை கொண்டதாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற சியோமி ரெட்மி 5 மற்றும் ரெட்மி 5 பிளஸ் ஆகிய இரு மாடல்களும் 18:9 ஆஸ்பெக்ட் விதிகசாரத்தை க்கொண்டதாக இருக்கலாம்.

ரெட்மி 5 போன் மிக அகலமான 5.7 அங்குல உயர்தர காட்சி திரையுடன் ஆண்ட்ராய்டு 7.1.1 இயங்குதளத்தை பின்னணியாக கொண்ட MIUI 9 இயங்குதளத்தை பெற்று 4ஜிபி ரேம் உடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 SoC கொண்டு 16ஜிபி, 32ஜிபி மற்றும் 64ஜிபி உள்ளீட்டு சேமிப்புடன் விளங்கலாம்.

பின்புறத்தில் எல்இடி ஃபிளாஷ் உடன் கூடிய ஒற்றை 12 மெகாபிக்சல் சென்சார் கேமரா வழங்கப்பட்டிருப்பதுடன், முன்புறத்தில் 5 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டிருக்கலாம்.

3,300mAh திறன் பெற்ற பேட்டரி கொண்டு இயக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற ரெட்மி 5 மொபைல் விலை ரூ.13,499 ஆக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ரெட்மி 5 பிளஸ் மாடல் 5.9 அங்குல உயர் தெளிவு திரையுடன் எல்இடி ஃபிளாஷ் உடன் கூடிய இரண்டு 12 மெகாபிக்சல் சென்சார் பெற்ற டூயல் கேமரா வசதியுடன் முன்புறத்தில் 5 மெகாபிக்சல் சென்சார் பெற்றதாக 4000mAh பேட்டரி கொண்டு இயக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதிகார்வப்பூர்வ நுட்ப விபரங்கள் மற்றும் இந்தியா வருகை குறித்தான விபரங்கள் டிசம்பர் 7ந் தேதி கிடைக்கப்பெறலாம்.

Comments

comments