உலகின் முதல் 5G ஸ்மார்ட்போன் : ZTE ஜிகாபிட்

Ads

1Gbps வேகத்தில் தரவிறக்கும் செய்யும் வல்லமை கொண்ட உலகின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் மாடலாக  ZTE ஜிகாபிட் (ZTE GIGABIT) சர்வதேச மொபைல் வோர்ல்டு அரங்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ZTE ஜிகாபிட்

உலகின் முதலாவது 5ஜி சேவையில் இயங்கும் வல்லமை கொண்ட இந்த கருவியில் பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டதாக விளங்குகின்றது. 5ஜி சேவை அனேகமாக 2020 ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் பல நாடுகளில் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் முதற்கட்டமாக 2018 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் தென்கொரியாவில் சோதனை ஓட்டத்தை KT Corp திட்டமிட்டுள்ளது.

ZTE நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவினால் உருவாக்கப்பட்டுள்ள ஜிகாபிட் மொபைல் வழியாக ஒரு முழுபடத்தை வெறும் நொடிகளில் தரவிறக்கும் வகையில் 1Gbps வேகத்தை பெற்றதாக ஜிகாபிட் ஸ்மார்ட்போன் விளங்கும்.

இந்த கருவியில் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 835 பிராசஸருடன் இணைக்கட்ட ஸ்னாப்டிராகன் X16 LTE மோடம் இணைக்கப்பட்டு ,சேவைகளுக்கு 4×4 MIMO ஆன்டனா நுட்பத்தை பெற்று , 256-QAM மாடுலேஷன் உதவியுடன் நடைமுறையில் உள்ள LTE தரவிறக்க வேகத்தை விட ஜிகாபிட் கருவியின் வேகம் 10 மடங்கு கூடுதலாக முதல் தலைமுறை LTE சேவையை விட இருக்கும் என இசட்டிஇ தெரிவிக்கின்றது.

தற்பொழுத் இந்த மொபைல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவினால் உருவாக்கப்பட்டு வருகின்ற நிலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர ZTE நிறுவனம் பிளேட் V8 Mini மற்றும் V8 Lite மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

Comments

comments