ஃபிளிப்கார்ட் ரிட்டர்ன் பாலிசியில் மாற்றம் : இனி 10 நாட்கள் மட்டுமே

Ads
இந்தியாவின் முன்னனி ஆன்லைன் வர்த்தக தளமான ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் பொருள் பிடிக்காமல் திருப்பி தரப்படும் ரிட்டர்ன் பாலிசியில் இனி 10 நாட்களுக்குள் பொருளை திருப்பி தரவேண்டும் என மாற்றம் செய்ய உள்ளது.

தற்பொழுது பொருள் பிடிக்கவில்லை , குறைகள் இருப்பின் திருப்பி தருவதற்கான காலக்கெடு 30 நாட்களாக இருந்து வருகின்றது. இதனை அதிகம் விற்பனை ஆகின்ற பொருட்களான எலக்ட்ரானிக்ஸ் , புத்தகம் , மொபைல் போன்கள் போன்றவற்றுக்கு 30 நாட்களிலிருந்து 10 நாட்களாக குறைக்கின்றது.

ஆடைகள் , ஆபரனங்கள் , காலனிகள் , வாட்ச் , கண்ணாடிகள் , பேஷன் பொருட்கள் போன்றவற்றுக்கு முந்தைய 30 நாட்கள் ரிட்டர்ன் பாலிசியே தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர விற்பனையாளர்கள் செலுத்த வேண்டிய கமிஷன் தொகையை 9 % வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. புதிய விகிதங்கள் ஜூன் 20 முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிட்டரன் பாலிசி ஜூலை முதல் முழுமையாக நடைமுறைக்கு வரலாம்.

மேலும் படிங்க ; மலிவு விலையில் ஸ்வைப் எலைட் ப்ளஸ் வாங்க

அமேஸான் ,ஸ்நாப்டீல் போன்ற தளங்களுடன் மிக கடுமையான வர்த்தக போட்டியை ஃபிளிப்கார்ட் சந்தித்து வருகின்றது. எக்கனாமிக் டைம்ஸ் பேட்டியில் வெளியாகியுள்ளது.

ஃபிளிப்கார்ட் மொபைல் ஆப் இன்ஸ்டால் செய்ய ; Best offers and Exclusive Deals

Comments

comments