உலகின் இணைய தேடலின் முன்னணி தளமான கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு பிளாட்பாரத்தில் குழந்தைகளின் பொபைல் பயன்பாட்டினை கண்காணிக்கும்  நோக்கில் கூகுள்  ஃபேம்லி லிங்க் ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஃபேம்லி லிங்க் ஆப்

  • முதற்கட்டமாக அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  • ஆண்ட்ராய்ட் 4.4 கிட்கேட் இயங்குதளத்துக்கு மேல் உள்ள பதிப்பில் மட்டுமே செயல்படும்.
  • குழந்தைகளின் படிப்பு நேரம் , உறங்கும் நேரம் போன்றவற்றை வகுத்து மொபைலை லாக் செய்யலாம்.

குழந்தைகளிடம் மிக வேகமாக வளர்ந்து வருகின்ற மொபைல் பயன்பாட்டினை பெற்றோர்கள் கண்காணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஃபேம்லி லிங்க் ஆப் வாயிலாக கூகுள் ஜிமெயில் கணக்கை கொண்டு செயல்படுத்தலாம்.

பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்தும் இரு மொபைல்களிலும் பேமலி லிங்க் ஆப்பினை தரவிறக்கி கூகுள் கணக்கினை கொண்டு நிர்வாகிக்கும் வகையில் செயல்படுகின்ற இந்த செயலில் குழந்தைகளின் மொபைலில் கேம்ஸ் அல்லது எதாவது ஒரு ஆப் தரவிறக்கம் செய்ய வேண்டுமெனில் பெற்றோர்கள் ஸ்மார்ட்போனுக்கு மெசேஜ் கிடைக்கும். அதனை அவர்கள் அனுமதித்தால் மட்டுமே தரவிறக்கம் செய்யலாம் இல்லையெனில் டவுன்லோட் செய்ய இயலாது.

மேலும் குழந்தைகள் படிக்கின்ற நேரம் உறங்குகின்ற நேரம் போன்வற்றை தீர்மானித்து அதற்கு ஏற்ப மொபைலை இயங்காதவாறு லாக் செய்யலாம்.அவ்வாறு லாக் செய்யும் பொழுது தேவையற்ற நேரங்களில் மொபைல் பயன்படுத்துவது தவிர்க்கப்படும்.

அடுத்தது குழந்தைகள் எந்த மாதிரியான விஷயங்களுக்கு மொபைலில் ஆர்வம் காட்டுகிறார்கள் . எந்த ஆப்பினை அதிகம் பயன்படுத்துகிறார்கள் போன்ற தகவல்களை வாரந்திரம் ஒருமுறை ரிபோர்டாக பெறும் வசதியும் உள்ளது.

தற்பொழுது அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஃபேம்லி லிங்க் அடுத்த சில மாதங்களில் சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்படலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here