ஃபேஸ்புக் மெசேஞ்சரில் ஸ்னாப்சாட் வசதி வருகை ?

Ads

ஃபேஸ்புக் மெசேஞ்சரில் புதிய வசதியாக ஸ்னாப்சாட்டில் உள்ளதை போன்ற வசதியை மெசஞ்சர் டே என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. வாட்ஸ்ஆப் , இன்ஸ்டாகிராம் தொடர்ந்து மெசஞ்சரிலும் இந்த வசதி வந்துள்ளது.

மெசஞ்சர் டே

ஸ்னாப்சாட்டில் உள்ள படங்கள் மற்றும் வீடியோ வைக்கும் வசதியை முதற்கட்டமாக வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்திருந்தது.அதனை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ஜியோஸ்டிக்கர்ஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.

மை டே

இதே போன்ற வசதியை தற்பொழுது ஃபேஸ்புக் மெசேஞ்சரில் மெசஞ்சர் டே அதாவது மை டே என வழங்கப்பட்டுள்ள இந்த வசதி 24 மணி நேரத்துக்கு மட்டுமே இருக்கும் . அதன் பிறகு புதிய மை டே வசதியை மாற்றிக் கொள்ளலாம்.

யுவர் டே

மேலும் இந்த வசதியை நண்பர்கள் மற்றும் குழுக்கள் போன்றவற்றில் பகிரவும் செய்யலாம். இதற்கு படங்கள் மற்றும் வீடியோ போன்றவற்றை வைத்த பின்னர் add to your day ஆப்ஷன் வழியாக உறுதி செய்யலாம்.

பிரைவசி

அடுத்து யார் உங்களுடைய மை டே வசதியை காணலாம் என்பதனை மோர் ஐகான் பொத்தானை கிளிக் செய்து உங்கள் நண்பர் அல்லது குறிப்பிட்ட சில என வைத்துக்கொள்ளலாம் என்பதனால் உங்களுக்கு பிரைவசி கிடைக்கும்.

அனைத்து பயணர்களுக்கும் அடுத்த சில மணி நேரங்களில் கிடைக்க உள்ளது.

Comments

comments