ஃபேஸ்புக் மெசேஞ்சரில் முதன்முறையாக டிஸ்லைக் பட்டன் சேர்க்கப்பட்டு புதிய அப்டேட் சர்வதேச அளவில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் குரூப் சாட் வசதியில் சில மேம்பாடுகளை தந்துள்ளது.

மெசேஞ்சரில் Dislike பட்டன்

  • முதன்முறையாக மெசேஞ்சர் செயிலில் டிஸ்லைக் பட்டன் சேர்க்கப்பட்டுள்ளது.
  • டிஸ்லைக் பட்டன் தவிர எமோஷன் எமோஜிக்களும் வந்துள்ளது.
  • குரூப் சாட் செய்யும்பொழுது அதனை குறிப்பிட்ட நண்பருக்கு டேக் செய்து காட்டும் வகையில் @ என டைப் செய்து அவரின் பெயரை சேர்த்து அனுப்பினால் போதும்.

ஃபேஸ்புக் சார்பில் வழங்கப்பட்டு வருகின்ற மெசேஞ்சர் சேவையில் பல்வேறு மேம்பாடுகளை வழங்கி உள்ள நிலையில் குறிப்பாக டிஸ்லைக் பட்டன் மற்றும் Love, Smile, Wow, Sad, Angry போன்ற எமோஜிக்களும் வழங்கப்பட்டுள்ளது.

மேசேஞ்சரில் க்ரூப் சாட் செய்யும்பொழுது குறிப்பிட்ட நபருக்கு தனியான கவனம் பெறும் வகையில் மேசேஞ் அனுப்புவதற்கு @ பட்டனை அழுத்தி பிறகு அவரின் பெயரை இணைத்து அனுப்பினால் அதனை இலவகுவகாக பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.