சமூக வலைதளங்கில் முதன்மையான இடத்தில் உள்ள ஃபேஸ்புக் நிறுவனம் கடந்த 2016 ஆம் ஆண்டின் 4வது காலண்டில் 3.57 பில்லியன் டாலர் (சுமாராக 23,918 கோடி ரூபாய்) வருமானத்தை பெறுவதற்கு ஜியோ 4ஜி இலவச சலுகையும் முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் லாபம் அதிகரிக்க ஜியோ தான் காரணம் - ஃபேஸ்புக்

 ஃபேஸ்புக் லாபம்

ஆசியா பசுஃபிக் பிராந்தியத்தில் (APAC- Asia-Pacific) ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு முக்கிய வாடிக்கையாளர்கள் சந்தையாக இந்திய விளங்குகின்றது. சுமார் 165 மில்லியன் இந்திய பயணர்களை ஃபேஸ்புக் கொண்டுள்ளது.  கடந்த 5 மாதங்களாகவே ஜியோ நிறுவனம் எண்ணற்ற இலவச சலுகைகளை வழங்கி வருவது அனைவரும் அறிந்த செய்தியே ஆகும்.

கடந்த 2016யின் 4வது காலாண்டில் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு விளம்பரம் மூலம் கிடைத்த வருமானத்தில் 84 சதவீத வருவாய் மொபைல் பயன்பாட்டாளர்கள் விளம்பரத்தின் வாயிலாக மட்டுமே வந்திருக்கிறது. குறிப்பாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் இரண்டாவது மிகப்பெரிய வர்த்தக சந்தையாக இந்தியா திகழ்கின்றது. கடந்த செப்டம்பர் முதல் டிசம்பர் 31 ,2016 வரை ஜியோ வழங்கி இலவச சலுகையின் பயன்பாட்டின் காரணமாகவே ஃபேஸ்புக் மிக சிறப்பான வளர்ச்சியை இந்தியாவில் பதிவு செய்துள்ளது.

மொத்த மொபைல் இணைய பங்களிப்பில் 94 சதவிகித டேட்டா பங்களிப்பை ஜியோ 4ஜி பெற்றுள்ளதாகவும் வோடாபோன் ,ஐடியா , ஏர்டெல் போன்றவை தலா 2 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றது.

வருகின்ற மார்ச் 31 ,2017 வரை ஹேப்பி நியூ இயர் சலுகையை ஜியோ வழங்கி உள்ளது. மேலும் ஜூன் 30 2017 வரை மிக குறைந்த கட்டணத்தில் டேட்டாவை வழங்கும் வாய்ப்புகளை ஜியோ ஏற்படுத்த உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here