உலகில் பில்லியன் கணக்கான மக்களால் பயன்படுத்தப்படுகின்ற வாட்ஸ்ஆப் செயலில் பல்வேறு புதிய வசதிகள் மற்றும் மேம்பாடுகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றது. புதிதாக வீடியோ , வாய்ஸ் கால்களுக்கு என தனியான அமைப்பினை ஏற்படுத்த உள்ளது.

வாட்ஸ்ஆப் அப்டேட்

 

சமீபத்தில் புதிய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அறிமுகம் செய்யப்பட்டு இந்த ஸ்டேட்டஸ் வாயிலாக படங்கள் , வீடியோ என எந்த ஸ்டேட்டசையும் 24 மணி நேரத்துக்கு வைக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டது.

தற்பொழுது பீட்டா நிலையில் உள்ள  2.17.93 பதிப்பில் நடைமுறையில் உள்ள வாய்ஸ் மற்றும் வீடியோ கால்களுக்கு என ஒரே பொத்தான் அமைப்பினை பெற்றுள்ள வாட்ஸ்ஆப்பில் இனி இரண்டுக்கும் தனித்தனியான அமைப்பினை பெறுகின்றது. கீழே உள்ள படத்தில் பார்க்கலாம்.

அடுத்த மேம்பாடு ஃபைல்களை இணைக்கும் செயல்பாடு நடைமுறையில் உள்ள செயலில் மேலே கொடுக்கப்பட்டிருக்கும்.தற்பொழுது அதனை கீழே படங்கள் மற்றும் வீடியோவினை தரவேற்றும் வசதி கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் அமைந்துள்ளது. இதனை கீழே உள்ள படத்தில் கீழே உள்ள படத்தில் பார்க்கலாம்.

தற்பொழுது பீட்டா நிலையில் உள்ள இந்த வசதிகள் விரைவில் பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புகள் உள்ளது. இந்தியாவில் தினமும் 200 மில்லியன் பயணர்களை பெறுகின்ற வாட்ஸ்ஆப் உலகயளவில் 1.2 பில்லியன் பயணர்களை பெற்றுள்ளது.