அழைப்புகளை மேற்கொள்ள பெற, இணையத்தை உலாவ, இல்லத்தை ஸ்மார்ட் ஹோமாக மாற்ற என அனைத்து விதமான நவீன அம்சங்களை பெற்றதாக குரல் வழியாக மேற்கொள்ள அமேசான் ஈக்கோ ஷோ (amazon echo show) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அமேசான் ஈக்கோ ஷோ

7 அங்குல டச்ஸ்கீரின் கொண்ட ஈக்கோ ஷோ கருவியில் வை-ஃபை வாயிலாக இணைப்பை ஏற்படுத்தி ஆன்லைன் ஷாப்பிங், யூடியூப் உலாவல், பாடல்கள், வானிலை அறிக்கை, செய்ய வேண்டிய செயல்களுக்கான அட்டவனை , என அனைத்தையும் வழங்குகின்ற அமேசான் இக்கோ ஷோவில் அலெக்ஸா குரல் வழி அம்சம் வழங்கப்படுள்ளது.

வீடியோ அழைப்புகளை பெற மற்றும் மேற்கொள்ள அலெக்ஸா ஆப் வாயிலாக பயன்படுத்துவதுடன் முன்புறத்தில் 5 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.. மேலும் வை-ஃபை வாயிலாக ஸ்பாட்ஃபை, பான்டோரா, ஐ ஹார்ட் ரேடியோ போன்றவற்றின் வாயிலாக பாடல்களை ரசிக்கலாம்.

சாதாரன இல்லத்தை ஸ்மார்ட் ஹோமாக மாற்றும் வகையில் விளக்குகள் அனைக்க ,இயக்க என ஸ்மார்டாக கருவிகளைஇயக்கும் வகையிலான வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

அமேசான் ஈக்கோ ஷோ விலை $229.99 (Rs 15,000)

இணைக்கப்பட்டுள்ள அமேஸான் ஈகோ ஷோ அறிமுக வீடியோவை காணலாம்.> .https://youtu.be/WQqxCeHhmeU