அம்ரிதா பிரீதம்

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அம்ரிதா பிரீதம் ஆகஸ்டு 31, 1919-யில் பிறந்தார். பஞ்சாபி மற்றும் இந்தி மொழிகளில் எழுதிய பஞ்சாபிக் கவிஞரும், எழுத்தாளரும், புதின ஆசிரியரும் ஆவார். இவர் காதல் முதல் சமூக அவலங்கள் என பலவற்றை தனது படைப்புகளில் வடித்துள்ளார்.  இந்தியாவின் உயர்ந்த இலக்கிய விருதுகளான ஞானபீட விருது, சாகித்திய அகாதமி விருது, பஞ்சாப் ரத்தனா விருது உட்பட்ட பல விருதுகளைப் பெற்றவர்.

தற்போது பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபில் குஜ்ரன்வாலா என்னும் ஊரில் பிறந்தார். அவருடைய தந்தை ஒரு பள்ளி ஆசிரியரும், சீக்கிய மதப் போதகரும், ஒரு இலக்கிய இதழாசிரியருமாவார். அம்ரிதம் பதினோரு வயதுச் சிறுமியாக இருந்தபோது அவருடைய தாயார் காலமானார். அந்த தனிமையைப் போக்க எழுதவதில் ஆர்வம் காட்டினார்.

இந்தியா பாகிஸ்தான் பிரிவிணையின் போது ஏற்பட்ட வண்முறையினால் பாதிக்கப்பட்ட இவர், இந்தியாவில் தஞ்சமடைந்தார். அந்த சமயத்தில் ஏற்பட்டு அவல உணர்வை ஒரு தாளில் எழுதினார். ‘நான் வாரிஸ் ஷாவை கேட்கிறேன்’ என்னும் தலைப்பிட்ட ஓர் அருமையான கவிதை ஆகும்.

60 ஆண்டுகளாக படைப்புத்துறையில் புகழ்பெற்று விளங்கிய அம்ரிதா பிரீதம் அக்டோபர் 31, 2015-யில் மறைந்தார்.