அம்ரிஷ் புரி

பிரபலமான வில்லன் நடிகரான அம்ரிஷ் புரி (Amrish Puri) அவர்களின் 87வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் சிறப்பு டூடுல் ஒன்றை கூகுள் வெளியிட்டுள்ளது. பாலிவுட் மட்டுமல்லாமல், ஹாலிவுட், கோலிவுட் என மிகவும் பிரபலமாக விளங்கியவர் ஆவார்.

அம்ரிஷ்லால் புரி (22 ஜூன் 1932 – 12 ஜனவரி 2005) பஞ்சாபி மாநிலத்தில் பிறந்தார். 400 படங்களுக்கு மேல நடித்துள்ள பூரி 1967 முதல் தனது மரணம் வரை திரைத்துறையில் விளங்கினார். குறிப்பாக பாலிவுட் சினிமாவின் மிக பிரபலமான வில்லனாக அறியப்படுகின்றார்.

அம்ரிஷ் புரி பிறந்த நாள்

தனது முதல் திரை சோதனை முடிவு இவருக்கு தோல்வியை ஏற்படுத்தியவுடன், ESIயில் பணிக்கு இணைந்தார். அதே சமயத்தில், சத்யதேவ் துபே உடன் இணைந்து நாடகங்களில் நடித்து வந்தார். பிரபலமான நாடக நடிகராக உயர்ந்த அம்ரிஷ் தொடர்து பல்வேறு நாடகங்களில் நடித்து புகழ் பெற்றார்.

1970 ஆம் ஆண்டில் முதன்முறையாக பிரேம் பூஜாரி என்ற இந்தி திரைப்பட்டதில் அறிமுகமான இவர் தொடர்ந்து கன்னடம், மராத்தி, ஹாலிவுட், பஞ்சாபி, மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் பணிபுரிந்தார். அவர் பல பிராந்திய படங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், பாலிவுட் சினிமாவில் பணியாற்றியதற்காக அவர் மிகவும் பிரபலமானவர்.

ஆரம்ப காலங்களில் துனை கதாப்பத்திரங்களில் நடித்து வந்த அம்ரிஷ் புரி, ஹம் பஞ்ச் என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக வில்லன் நடிகராக அறிமுகமானர். பின்னர் பல்வேறு திரைப்படங்ளில் நடித்து புகழ் பெற்றார். குறிப்பாக இவர் சிறந்த வில்லன் நடிகருக்கான பிலிம்பேர் விருதினை பல்வேறு முறை பெற்றுள்ளார்.

1982 ஆம் ஆண்டி வெளிவந்த காந்தி திரைப்படம், கமலின் ஹிந்தி படமான சேச்சி 420 (தமிழில் அவ்வை சன்முகி) மற்றும் தமிழில் தளபதி, மற்றும் பாபா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

அம்ரிஷ் பூரி (Amrish Puri)

1990 ஆம் ஆண்டுக்கு பிறகு பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரங்களை தவிர்த்து மிக சிறப்பான கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

அம்ரிஷ் புரியை மைலோடிஸ்பிளாஸ்டிக் நோய்க்குறி, ஒரு அரிய வகை ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். டிசம்பர் 27, 2004 அன்று இந்துஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சில மூளை ஆக்கிரமிப்பு அறுவை சிகிச்சை செய்தார். பின்னர் , ஜனவரி 12, 2005 ஆம் ஆண்டு மரணத்தை தழுவினார்.