பெண்களின் அழகை பொருத்து அவர்களின் மொபைல் எண்கள் விலை போகின்றதாக அதிர்ச்சி ரிபோர்ட் வெளியாகியுள்ளது. மொபைல் ரீசார்ஜ் மையங்கள் வாயிலாக பெண்களின் மொபைல் எண்களை 50 ரூபாய் முதல் 500 ரூபாயை வரை அவர்களின் அழகை  பொருத்து பெண்கள் மொபைல் எண்களை உத்திரபிரதேச மாநிலத்தில் விற்பனை செய்யப்படுகின்றதாம்.

  அழகிய பெண்கள் மொபைல் எண்கள்

ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ள இது குறித்தான செய்தியில் ரீசார்ஜ் கடைகளில் டாப்அப் செய்ய வரும் பெண்களின் எண்களை ரீசார்ஜ் கடை உரிமையாளர்கள் குறித்து வைத்துக்கொண்டு அவர்களின் அழகை பொருத்து மொபைல் எண்களை விற்பனை செய்யும் தொழிலை பெரும்பாலான ரீசார்ஜ் கடை உரிமையாளர்கள் செய்வதாக தெரிவிக்கின்றது.

மொபைல் எண்ணை வாங்குபவர்கள் அந்த பெண்களுக்கு இரவு நேரங்களில் அழைப்பினை ஏற்படுத்தி தொல்லை தருவதாக அதிர்ச்சி செய்தியை குறிப்பிட்டுள்ளது. மேலும் வாட்ஸ்அப் போன்றவற்றில் ஆபாச படங்களையும் அனுப்பி வைப்பதாக தெரிவிக்கின்றது. அழைப்பு வந்த மொபைல் எண்ணை டிராக் செய்து அவர்களின் முகவரிகளை கண்டுபிடித்து சென்றாலும் பெரும்பாலும் போலியாகவே உள்ளதாக காவல்துறை தெரிவிக்கின்றதாம்.

மொபைல் கடைக்கார்கள் பெரும்பாலான போலியான நபர்களின் பெயரில் எண்ணற்ற சிம்களை ஏக்டிவேட் செய்து அவற்றை இது போன்ற நபர்களிடம் விற்று கொள்ளை லாபம் சம்பாதிப்பதாகவும் தெரிகின்றது. சிம் வாங்க கொடுப்பவர்களின் அடையாள அட்டை மற்றும் போட்டோவினை கொண்டு அதிகமான ஜெராக்ஸ் மற்றும் போட்டோக்களை தயார் செய்து கொண்டு இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனராம்.

உத்திரபிரதேசத்தில் இதுகுறித்தான புகார்கள் பெண்கள் உதவி எண்ணாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 1090 இலவச எண் வாயிலாக 6,61,129 புகார்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் பதிவாகியுள்ளதாம். இவற்றில் பெரும்பாலான புகார்கள் போன் வழியாக வரும் அழைப்புகளே ஆகும்.

உங்கள் மொபைல் எண்களை பாதுகாப்பாக வைத்து கொள்ளுங்கள்.. முடிந்தவரை ஆன்லைன் ரீசார்ஜ் அல்லது நன்றாக அறிமுகமான ரீசார்ஜ் இடங்களில் மட்டுமே மொபைல் எண்ணை கொடுத்த டாப்அப் செய்யுங்கள் அல்லது டாப்அப் கார்டுகளை வாங்கி பயன்படுத்துங்கள்…..நண்பர்களே……..

தகவல் உதவி – hindustantimes