ஆண்ட்ராய்டு இயங்குதளங்களுக்கு கூகுள் நிறுவனம் சுவாரஸ்யமாக உனவு பொருட்கள் பெயரை வைப்பது உண்டு அந்த வரிசையில் அடுத்த பதிப்பான ஆண்ட்ராய்டு 8.0 தளத்திற்கு ஓட்மீல் குக்கீ (Oatmeal cookie) என்ற பெயர் உறுதி செய்யப்படும் வாய்ப்புகள் உள்ளது.

ஆண்ட்ராய்டு ஓ என்றால் ஓட்மீல் குக்கீ ..!

ஆண்ட்ராய்டு ஓட்மீல் குக்கீ

இந்த புதிய பதிப்பிலும் உனவு பொருட்கள் பெயரை வைக்கும் என்ற நிலையில் ஆங்கில ஆல்ஃபாபெட்ஸ் வரிசையில் தற்போதைய 7.0 பதிப்பிற்கு N எனப்படுவதற்கு நௌவ்கட் என பெயர் சூட்டியிருந்த நிலையில் அடுத்த ஆண்ட்ராய்டு 8.0 பதிப்பில் O என்ற தொடங்கும் என்பதால் ஓரியோ என்பதற்கு பெரும் ஆதரவு இருந்த நிலையில் தற்போது ஓட்மீல் குக்கீ (Oatmeal cookie) என்ற பெயர் கூகுள் உருவாக்குநர் தள கோடுகள் வாயிலாக வெளியாகியுள்ளது.

ஆண்ட்ராய்டு ஓ என்றால் ஓட்மீல் குக்கீ ..!

myce என்ற இணையதளம் பல்வேறு ஆதராங்களின் அடிப்படையில் ஆண்ட்ராய்டு ஓ என்றால் ஓட்மீல் குக்கீ என உறுதி செய்துள்ளது.

ஓட்மீல் குக்கீஸ்கள் என்றால் ஓட்ஸ், மாவு, சர்க்கரை மற்றும் வென்னெய் போன்வற்றை கொண்டு தயார் செய்யும் குக்கீஸ்காளாகும்.

For the latest news, Mobile news, breaking news headlines and live updates checkout Gadgetstamilan.com