வரவுள்ள புதிய ஆண்ட்ராய்டு என் எனப்படும் ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளத்தை ரேன்சம்வேர் மற்றும் மால்வேர் போன்றவற்றின் தாக்குதலை சமாளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டின் முந்தைய இயங்குதளங்களில் ரேன்சம் மற்றும் மால்வேர்கள் வாயிலாக இலகுவாக மொபைல்போனை ரீசெட் செய்து தேவையற்ற ஆப்ஸ் மற்றும் வைரஸ்கள் நிரம்பி வந்தன. வரவுள்ள ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் புதிய பதிப்பான ஆண்ட்ராய்டு என் பதிப்பில் அவ்வாறு செய்ய இயலாது என சைமன்டெக் பிளாக் தகவல் வெளியிட்டுள்ளது.

Android.Lockdroid.E சிஸ்டம் அமைப்பில் வைரஸ் தாக்குதல் ஏற்பட்டால் சிஸ்டம் பிழை மற்றும் பாஸ்வோர்டு ரீசெட் போன்ற அறிவிப்புகள் வெளியாகி மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்ற ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்களுக்கு பாஸ்வோர்ட் மற்றும் மொபைல் ஃபேக்ட்ரி ரீசெட் போன்றவற்றை செய்தாலும் கூட மால்வேர் முழுதாக நீங்குவது இல்லை என்பதனால் புதிதாக வரவுள்ள நௌகட் இயங்குதளத்தில் பாதுகாப்பு அம்சங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு நௌகட் வெர்ஷனில் the resetPassword API என்ற அமைப்பின் வாயிலாக சரியான பாஸ்வோர்டு ,  பேட்டர்ன் லாக்  இல்லாமல் மொபைலை ரீசெட்டிங் செய்ய இயலாது . எனவே ரென்சம் மற்றும் மால்வேர் தாக்குதல்களால் மொபைலை ரூட்டிங் மற்றும் ரீசெட் செய்து தேவையற்ற ஆப்ஸ்களை தரவிறக்கம் செய்வது பெரிதும் கட்டுப்படுத்தப்படும்.

 மேலும் படிக்க ; மால்வேர் ஹம்மிங்பேட் தாக்குதல்