7 வழிகளில் ஆண்ட்ராய்டு மொபைல் போன் வேத்தை எவ்வாறு அதிகரிப்பது என்று தெரிந்து கொள்ளலாம். ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனின் வேகத்தினை அதிகரிப்பதன் வாயிலாக மிகு இலகுவாக எஸ்எம்எஸ் , வீடியோ , கேம்ஸ் போன்றவற்றை சிறப்பாக பயன்படுத்த முடியும்.

ஆண்ட்ராய்டு மொபைல் போன் வேகத்தை அதிகரிப்பது எப்படி ?

1. என்ன பிரச்சனை

முதலில் நம்முடைய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் எந்தமாதிரியான பிரச்சனையால் போனின் செயல்திறன் குறைந்திருக்கின்றது என்பதனை கண்டுபிடிப்பது மிக அவசியமாகும். குவால்கோம்யின் Trepn Profiler என்ற பெயிரிலான ஆப்ளிகேஷனை முதலில் உங்கள் மொபைலில் நிறுவி சிபியூ செயல்திறனை கவனியுங்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரண்டிலும். கவனித்தால் செயல்திறன் கிராப் வாயிலாக உங்கள் போனில் உள்ள பிரச்சனை மற்றும் செய்திறனை குறைக்கும் ஆப்ஸ்கள் மற்றும் எந்த செயலிக்கு அதிக பேட்டரி காலியாகின்றது என பலவற்றை தெரிந்து கொள்ள இயலும்.

2. தேவையற்ற ஆப்ஸ்

அதிகமாக பயன்படுத்தாத தேவையற்ற அப்ளிகேஷனை நீக்கினால் ரேம் இலுகவாக இயங்குவும் கூடுதல் மெம்மரி கிடைக்கும்.  செட்டிங்கில் ஆப்ஸ் பகுதிக்கு சென்று தேவையற்ற ஆப்ளிகேஷனை நீக்குங்கள்.

ஆண்ட்ராய்டு மொபைல் போன் வேகத்தை அதிகரிப்பது எப்படி ?ஆண்ட்ராய்டு மொபைல் போன் வேகத்தை அதிகரிப்பது எப்படி ?

3. கிளியர் கேச்

கேச் என அழைக்கப்படுகின்ற தற்காலிக சேமிப்புகளை கிளியர் கேச் போன்ற ஆப்ளிகேஷனை பயன்படுத்தி அழிக்கலாம். மேலும் மொபைல் போனில் உள்ள செட்டிங்ஸ் ஆப்ஷனில் சென்று ஸ்டோரேஜ் ஆப்ஷனுக்குள் சென்று கிளியர் கேச் கொடுங்கள்.

4. முகப்பில் விட்ஜெட்ஸ் 

ஹோம் ஸ்கிரினில் நம் தேவைக்கேற்ப பல ஆப்ஸ்களின் விட்ஜெட்ஸ் , ஷாட்கட் என பலவற்றை வைத்திருப்போம் அதி நமக்கு மிக எளிதான செயல்பாட்டுக்கு உதவினாலும் மொபைல் செயல்திறனை குறைக்கும் எனவே மிக அவசியமான ஆப்ஸ்களை வைத்துக்கொண்டு மற்றவற்றை நீக்கிவிடுங்கள்.

5. லைவ் வால்பேப்ரஸ் மற்றும் அனிமேஷன்

மிக ஸ்டைலிசாக இருக்க வேண்டும் என நாம் வைக்கும் பெருமாலான லைவ் வால்பேப்பரெகள் மற்றும் அனிமேஷன் செயல்பாடுகள் நம் மொபைலின் செயல்திறன் மட்டுமல்லாமல் பேட்டரியும் விரைந்து காலியாகும்.

ஆண்ட்ராய்டு மொபைல் போன் வேகத்தை அதிகரிப்பது எப்படி ?

6. மைக்ரோஎஸ்டி கார்டு

அதிக ஸ்டோரேஜ் ஸ்பேஸ் தேவைப்படும் ஆப்ஸ் , கேம்கள் போன்றவற்றை மைக்ரோஎஸ்டி கார்டுக்கு மாற்றிக்கொண்டால் ரேம் மற்றும் இன்டர்னல் மெம்ரி கிடைக்கும்.

7. ஆப் க்ளோஸ்

பின்புலத்தில் செயல்பட்டு வரும் அப்ளிகேஷனை நீக்கினால் ஆண்ட்ராய்டு மொபைல்போன் வேகத்தினை அதிகரிக்க இயலும்.

மேலே குறிப்பிட்டுள்ள 7 வழிமுறைகளையும் கடைபிடித்து பின்னர் மொபைல் போனை ரீஸ்டார்ட் செய்யுங்கள் தற்பொழுது ஆண்ட்ராய்ட் மொபைல் போன் வேகம் அதிகரித்து இருக்கும்.

ஆண்ட்ராய்டு மொபைல் போன் வேகத்தை அதிகரிப்பது எப்படி ?

ஒருவேளை திரும்ப பிரச்சனை தொடர்ந்தால் உங்களுடைய அனைத்து தகவல்களையும் பேக்அப் எடுத்துகொள்ளுங்கள். பிறகு செட்டிங்ஸ் ஆப்ஷனுக்கு சென்று மொபைல் போனை ஃபேக்ட்ரி ரீசெட்டிங் கொடுத்தால் மொபைல் புதிதாக வாங்கியபொழுது இருந்த நிலைக்கு திரும்பும்.

கவனிக்க ; ஃபேக்ட்ரி ரீசெட்டிங் செய்யும்பொழுது உங்களுடைய ஆண்ட்ராய்டு மொபைல் எண்கள் , எஸ்எம்எஸ் , வீடியோ , ஆப்ஸ் என பலவற்றை இழக்க வேண்டியிருக்கும் என்பதனால் முறையான பேக்அப் எடுத்த பிறகு ரீசெட்டிங் செய்யவும்.

reset android phones

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here