நெக்சஸ் ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் கிடைக்க தொடங்கி உள்ள நிலையில் இனி வரவுள்ள புதிய மாடல்களில் ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளத்தில் கிடைக்கும்.

பல நவீன வசதிகளை பெற்றுள்ள ஆண்ட்ராய்டு என் எனப்படும் ஆண்ட்ராய்ட் 7.0 இயங்குதளத்தில் பாதுகாப்பு , பேட்டரி, செயல்திறன் மற்றும் தனியுரிமை போன்றவை முக்கிய பங்காற்றுகின்றது.

ஆண்ட்ராய்டு 7.0 சிறப்புகள்

1. எமோஜி 
உங்களுடைய எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் சுமார் 1500 எமோஜி அடிப்படையாக சேர்க்கப்பட்டு புதிதாக 72 எமோஜி இணைக்கப்பட்டுள்ளது.
2. வேகமான செயல்பாடு
உங்களுடைய தேவைக்கேற்ப சிறப்பாக செயல்படும் வகையில் பூளூடுத் , வை-ஃபை போன்றவற்றை விரைவாக செயல்படுத்தலாம்.
3. தாய் மொழி வசதி
புதிதாக வந்துள்ள 7.0 இயங்குதளத்தில் எண்ணற்ற புதிய மொழிகள் மற்றும் வேகமாக கூகுளில் தேடுவதற்கு வாய்ஸ் பல மொழிகளில் கிடைக்க உள்ளது.
4. பல லேயர் செயல்பாடு
ஒரே சமயத்தில் இருவிதமான ஆப்ஸ்களை இயக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ள மல்டி டாஸ்க் வசதி சிறப்பான ஒன்றாகும்.
5. டைரக்ட் ரிபிளே
அறிவிப்புகளில் குறுஞ்செய்தி தகவல்கள் வந்திருத்தால் உடனடியாக அங்கேய பதில் தர இயலும்.
6. குயிக் சுவிட்ச்
இறுதியாக பயன்படுத்திய இரு ஆப்ஸ்களை உடனடியாக பெறுவதற்கு ஓவரிவியு பட்டனை இருமுறை டேப் செய்தால் போதும்.
7,. பேட்டரி சேமிப்பு
மிக சிறப்பான பேட்டரி சேமிப்பினை வழங்கும் வகையில்  கொடுக்கப்பட்டுள்ள டோஸ் வாயிலாக பேட்டரி பேக்கப் அதிகரிக்கும். 
8. செயல்திறன்
சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும் வகையில் வல்கன் (VulkanTM) இதன் வாயிலாக கேம் பெர்ஃபாமென்ஸ் சிறப்பாக இருக்கும்.
9. விரிச்சுவல் ரியாலிட்டி
விரிச்சுவல் ரியாலிட்டியை போனில் தரவல்ல கூகுள் டேட்ரீம் சேர்க்கப்பட்டுளது. வரவுள்ள புதிய மொபைல்களில் மட்டுமே கிடைக்கும்.
10. பாதுகாப்பு
முந்தைய பதிப்புகளை விட மிகுந்த பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் கிடைக்கும். அனைத்து தரவுகளும் என்க்ரிபட் செய்யப்பட்டிருக்கும். 
முதற்கட்டமாக நெக்சஸ் ஸ்மார்ட்போன்களில் கிடைக்க தொடங்கி உள்ள ஆண்ட்ராய்டு 7.0 அடுத்த சில வாரங்களில் பெரும்பாலான மொபைல்களுக்கு கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here