அடுத்த சில மாதங்களில் வரவுள்ள ஆண்ட்ராய்டு 8.0 அல்லது ஆண்ட்ராய்டு ஓரியோ என்ற பெயரிலோ வரவுள்ள புதிய பதிப்பானது பல்வேறு வசதிகளை பெற்றதாக விளங்கும் என எதிர்பார்க்கப்படும் பதிப்பில் உள்ள வசதிகளின் விபரங்கள் வெளியாகியுள்ளது.

ஆண்ட்ராய்டு ஓரியோ

தற்பொழுது நடைமுறையில் உள்ள ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் இயங்குதளம் 3 சதவீத பயன்பாட்டில் மட்டுமே உள்ள நிலையில் புதிய பதிப்பானது அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ள கூகுள் I/O டெவெலப்பர் அரங்கில் அறிமுகம் செய்யப்படலாம். இந்த புதிய பதிப்புக்கு ஆண்ட்ராய்டு ஒரியோ அதாவது ஆண்ட்ராய்டு ஓ என பெயரிடப்பட வாய்ப்புகள் உள்ளது.

வென்ச்சர் பீட் தளத்தில் வெளியாகியுள்ள மூன்று முக்கிய விபரங்கள்…!

1. காப்பி லெஸ்

காப்பி லெஸ் வசதியானது முக்கிய தகவல்களை காப்பி மற்றும் பேஸ்ட் செய்வதில் ஏற்படும் தொந்தரவுகளை குறைக்கும் வகையில் வரலாம் என தெரிவிக்கப்படுகின்றது. அதாவது அதிகம் பயன்படுத்தும் செய்திகளும் இடம்பெறலாம்.

அதாவது நீங்கள் மற்றும் உங்கள் நண்பருடன் உரையாடல் மேற்கொள்ளும்பொழுது எந்த உணவகத்தில் சாப்பிடலாம் என்ற கேள்விக்கு yelp ஆப் போன்றவற்றில் அருகாமையில் உள்ள ரெஸ்டாரன்ட் சார்ந்த ஜிபோர்ட் வாயிலாக தகவல்களை உடனடியாக காண்பிக்கும் வகையில் அமைந்திருக்கும்.

2. மேப் வசதி

ஆப்பிள் பிளேபுக் போன்றவற்றில் உள்ள இடம்சார்ந்த தகவலை வழிகாட்டி அமைப்பினை தெளிவாக காண்பிக்கும் வகையில் குறுஞ்செய்திகளில் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

3. கெஸ்ச்சர்

ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தில் கெஸ்ச்சர் அமைப்பில் ஆப்ஸ்களை பயன்படுத்தலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றது. அதாவது கெஸ்ச்சர் வாயிலாக C என வரைந்தால் கேமரா வசதி இயங்க தொடங்கலாம். இதுபோன்ற வசதி பல்வேறு உயர்ரக ஆண்ட்ராய்டு மொபைல்களில் இடம்பெற்றுள்ளது.

தொடர்ந்து தமிழில் டெக் செய்திகளை படிக்க கேட்ஜெட்ஸ் தமிழன் தளத்தை பின்தொடருங்கள்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here