வருங்கால ஆண்ட்ராய்டு N பிரிவியூ இயங்குதளத்தின் புதிய பெயர் நௌக்கட் (Nougat) என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தின் இறுதியில் புதிய ஆண்ட்ராய்டு 7.0 இயங்குளம் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நௌக்கட்

ஆண்ட்ராய்டு இயங்குதளங்களின் பெயர் தொடர்ச்சியாக உணவு பண்டங்களை அடிப்படையாக கொண்டே பெயரிடப்பட்டு வரும் நிலையில் அடுத்து வரவுள்ள புதிய மேம்பாடுகளை கொண்ட ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளத்தின் பெயருக்கு நௌக்கட் (Nougat) என வைக்கப்பட்டுள்ளது.

முந்தைய பதிப்புகளின் பெயர்கள் ஆண்ட்ராய்டு 1.5 கப்கேக் , ஆண்ட்ராய்டு 1.6 டூநட் , ஆண்ட்ராய்டு 2.0 இகேளய்ர் , ஆண்ட்ராய்டு 2.2 ஃபுரோயோ , ஆண்ட்ராய்டு 2.3 ஜிஞ்ஜர்பிரெட் , ஆண்ட்ராய்டு 3.0 ஹனிகாம்ப் , ஆண்ட்ராய்டு 4.0 ஐஸ்க்ரீம் சான்ட்விச் , ஆண்ட்ராய்டு 4.1 ஜெல்லி பீன் , ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் , ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் , ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ , வரவுள்ள புதிய ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் ஆகும்.

பல புதிய வசதிகளை கொண்ட இயங்குதளமாக மல்டி விண்டோஸ் வசதி , சிறப்பான அறிவிப்புகள் , மொபைல்நம்பர் பிளாக்கிங் என பல வசதிகளை பெற்று விளங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.