அனைத்து தேவைகளுக்கும் ஆதார் எண் அடிப்படையாக மாறி வருகின்ற நிலையில் பீம் ஆப் வாயிலாக ஆதார் எண்னை கொண்டு பணம் செலுத்துவது எவ்வாறு ? என தெரிந்து கொள்ளலாம். பீம் ஆப் ஆண்ட்ராய்டு மொபைல்களில் மட்டும் கிடைக்கின்றது.
நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (என்.பி.சி.ஐ) பிரிவின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பீம் ஆப் வாயிலாக மிக எளிதாக மின்னனு முறையில் பணபரிவர்த்தணையை மளற்கொள்ளலாம். தனித்துவ அடையாள அட்டை ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள ஆதார் கார்டு எண் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்குகளுக்கு மிக இலகுவாக பணத்தை இனி பரிமாற்றலாம். சமீபத்தில் தமிழ் மொழியிலும் பீம் ஆப் வழங்கப்பட்டுள்ளது.
ஆதார் எண் பணம் அனுப்பும் முறை
- பீம் ஆப்பில் உள் நுழையுவும்
- பணம் அனுப்புதல் (Send Money)
- பின்னர் மூன்று புள்ளிகள் கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் க்ளிக் பன்னுங்க.
- அதில் ஆதார் எண் (Aadhaar Pay) வாயிலாக செலுத்தும் முறையை தேர்வு செய்யவும்.
- அடுத்த யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவர்களின் ஆதார் எண்ணை மிக கவனமாகவும் சரியாகவும் பதிவு செய்யுங்கள்.
- நீங்கள் பதிவு செய்த ஆதார் எண்ணை வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளதா என உறுதி செய்து கொள்ளுங்கள் (Verifiy).
- நீங்கள் அனுப்ப வேண்டிய நபருடையதா என சோதனை செய்யவும்
- எவ்வளவு தொகை என குறிப்பிட்டு
- அனுப்புதல் பொத்தானை அழுத்துங்கள் (Send)
இந்த வழிமுறைகளை பயன்படுத்தி ஆதார் கார்டு மூலம் மிக வேகமாக பணத்தை அனுப்பலாம்….