ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போகளுக்கு மட்டுமல்ல ஆப்பிள் ஐபோன்களில் பெகாசஸ் என்ற ஸ்பைவேர் ஆபத்து இருப்பதாக காஸ்பர்ஸ்கை லேப் அறிக்கை தெரிவிக்கின்றது.

ஆப்பிள் ஐபோன்களில் பெகாசஸ் ஸ்பைவேர் ஆபத்து..!

பெகாசஸ் ஸ்பைவேர்

சமீபத்தில் வானாகிரை போன்ற சைபர் தாக்குதலை தொடர்ந்து பலதரப்பட்ட தீம்பொருள் மற்றும் வேவுபொருள் தாக்குதலுக்கு ஆண்ட்ராய்டு மொபைல்கள், வின்ணோஸ் கனிணிகளை தொடர்ந்து ஆப்பிள் ஐபோன் மற்றும் ஐபேட்களில் பெகாசஸ் எனும் வேவுபொருள் வகையைச் சார்ந்த ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

பெகாசுஸ் ஐபோன் மற்றும் ஐபேட்களில் உள்ள தகவல்களை கவர்ந்து கொள்வதுடன் , உங்களை உளவு பார்ப்பதாக மாஸ்கோவைச் சேர்ந்த காஸ்பர்ஸ்கை செய்தி வெளியிட்டுள்ளது.

ஆப்பிள் ஐபோன்களில் பெகாசஸ் ஸ்பைவேர் ஆபத்து..!

இந்த வேவுபொருளை இஸ்ரேல் நாட்டின் NSO குழு உருவாக்கியிருப்பதுடன், இந்த ஸ்பைவேர் வாயிலாக உரிமைகள் ஆர்வலர்களாக கருத்தப்படுகின்ற நபர்களை உளவு பார்பதற்காக பன்படுத்தப்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது. இதனை முதன்முறையாக அமீரகத்தைச் சேர்ந்த அகமது மன்சூர் எனும் உரிமைகள் நல ஆர்வலரின் வாயிலாக கண்டறியப்பட்டுள்ளது.

காஸ்பர்ஸ்கை அறிக்கையை தொடர்ந்து ஆப்பிள் உடனடியாக ஐபோன் மற்றும் ஐபேட்களில் புதிய பாதுகாப்பு சார்ந்த மேம்பாடுகளை வழங்கி உள்ளது. இந்த மேப்பாடு ஐஓஎஸ் 9.3.5 தளத்தில் கிடைக்கின்றது. இதனை ஆப்பிள் பயனாளர்கள் உடனடியாக மேம்படுத்திக்கொள்ள கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

For the latest news, Mobile news, breaking news headlines and live updates checkout Gadgetstamilan.com