ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் பயனர்களுக்கு ஏற்ற வகையில் புதிய ஆர்பிஐ மொபைல் ஆப் ஒன்றை ரிசர்வ வங்கி அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆப் ஆர்பிஐ இணையதளத்தை அடிப்படையாக கொண்டதாகும்.

ரிசர்வ வங்கியின் புதிய ஆர்பிஐ ஆப் அறிமுகம்

ஆர்பிஐ ஆப்

இந்த ஆப் வாயிலாக ஆர்பிஐ செய்திகள் ,  IFSC/ MICR கோடுகளை அறிய , வங்கி விடுமுறைகள் , புதிய ரூபாய் நோட்டு பற்றிய தகவல்கள் என பல்வேறு வசதிகளுடன் கூடுதலாக இன்றைய தினத்தின் ரூபாய் மதிப்பு 4 முக்கிய ருபாய்களுடன் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த செயலில் பலதரப்பட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கியுள்ளது. மேலும் முக்கிய விபரங்களை அறிவிப்புகளாக பெற அறிவிக்கை வசதியும் இடம்பெற்றுள்ளது.  அந்த ஆப் தற்பொழுது கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலும் கிடைக்கின்றது.

இது போன்ற செய்திகளை தொடர்ந்து வாசிக்க Gadgets Tamilan தளத்தை பார்வையிடுங்கள்….