இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் இ-காமர்ஸ் எனப்படும் மின் வர்த்தக முறையில் இந்தியர்களின் மிக விருப்பமான ஆன்லைன் இனையதளம் எது என்ற சர்வே முடிவுகள் சமீபத்தில் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் நெ.1 ஆன்லைன் இணையதளம் ப்ளிப்கார்ட் - சர்வே முடிவுகள்

“The Indian e-tailing Leadership Index” என்ற பெயரில் நடத்தப்பட்ட சர்வே 3000 வாடிக்கையாளர்களின் பேட்டி மற்றும் 6000 விநியோக நிகழ்வுகளை கொண்டு கணக்கிடப்பட்டுள்ள முடிவுகளின் அடிப்படையில் இந்தியர்களின் மிக விருப்பமான இ-காமர்ஸ் தளமாக ஃபிளிப்கார்ட் தளம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஃபிளிப்கார்ட் முதலிடமும் , அமேசான் 2வது இடத்திலும் மற்றும் ஸ்நாப்டீல் மூன்றாவது இடத்திலும் உள்ளது. 4 மற்றும் 5 வது இடங்களில் பேடிஎம் மற்றும் சாப்க்ளூஸ் உள்ளது.

இந்தியாவின் நெ.1 ஆன்லைன் இணையதளம் ப்ளிப்கார்ட் - சர்வே முடிவுகள்

ஃபிளிப்கார்ட் ஆன்லைன் வர்த்தக நிறுவனம் மிகச்சிறப்பான சேவைகளையும் விரைவாக டெலிவரி வழங்குவதிலும் சிறந்த விளங்குகின்றது என சர்வே முடிவுகள் வாயிலாக தெரிகின்றது. மேலும் சிறந்த வாடிக்கையாளர் சேவை , திரும்ப பெறுதல் , பணத்தை திரும்ப கொடுத்தல் போன்ற நடவடிக்கைகள் வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் நெ.1 ஆன்லைன் இணையதளம் ப்ளிப்கார்ட் - சர்வே முடிவுகள்

கடந்த மார்ச் மாத முடிவில் 75 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டு செயல்படும் மிகப்பெரிய நிறுவனமாக விளங்குகின்றது. அமெரிக்கா மற்றும் சீனா நாடுகளின் இணையதளங்களை தொடர்ந்து ஒரே நாட்டில் 75 மில்லியன் வாடிக்கையாளர்களை பெற்ற நிறுவனமாக ஃப்ளிப்கார்ட் விளங்குகின்றது.

clik here : Flipkart Special Offers details  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here