ரூ.9,999 விலையில் RDP தின்புக் 14.1 இன்ச் லேப்டாப் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆர்டிபி தின்புக் லேப்டாப் இந்தியாவின் விலை குறைந்த 14.1 இன்ச் லேப்டாப் ஆகும்.
14.1 இன்ச் முழு ஹெச்டி (1366×768 pixels) திரையுடன் கூடிய எல்இடி பேக்லைட் டிஸ்பிளேவினை பெற்றுள்ள லேப்டாபில் இன்டெல் ஆடாம் x5-Z8300 SoC, 1.44GHz டர்போ பூஸ்ட் 1.8 GHz வரையிலான 2 ஜிபி ரேம் பெற்றுள்ளது. 32ஜிபி சேமிப்பு திறனுடன் 128 ஜிபி வரையில் மைக்ரோ எஸ்டிகார்டு கொண்டு அதிகரிக்கலாம்.
விண்டோஸ் 10 ஹோம் இயங்குதளத்தில் செயல்படும் ஆர்டிபி தின்புக் லேப்டாப்பில் வெப் கேமரா , பூளூடூத் . வை-ஃபை ஆதரவு போன்றவற்றுடன் 10000mAh பேட்டரி பேக்கப் பெற்றுள்ளது.
இந்தியாவின் விலை குறைவான 14.1 இன்ச் RDP தின்புக் லேப்டாப் விலை ரூ.9999 ஆகும். வருடத்திற்கு 40,000 தின்புக்குகளை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
72 மணி நேர விற்பனை மாரத்தான் அட்டகாசமான சலுகைகள் பெற கீழுள்ள படத்தை க்ளிக் பன்னுங்க…