பூமியில் உள்ள பிராண்டுகளில் மிகவும் மதிப்பு மிக்க பிராண்டாக விளங்கும் ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் ஐபோன்கள் பெங்களூரு மாநகரில் வருகின்ற ஜூன் 2017 முதல் தயாரிக்கப்பட்ட உள்ளது.

ஐபோன்

கடந்த ஜனவரி 25ந் தேதி டெல்லியில் நடைபெற உள்ள ஆப்பிள் தொழிற்சாலை அமைப்பதற்கான பேச்சுவார்த்தை தொடங்கப்பட உள்ளது. இந்த பேச்சு வார்த்தையில் ஆப்பிள் ஐபோன்கள் இந்தியாவிலே உற்பத்தி செய்யும் நோக்கிலான திட்ட வரைவுகள் மற்றும் வரி விபரங்கள் குறித்தான முக்கிய விபரங்கள் பற்றி பேசப்பட உள்ளது. மேலும் ஆப்பிள் நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட உள்ள பாகங்கள் மற்றும் கருவிகளுக்கு 15 ஆண்டுகள் வரி இல்லாத (Tax holiday) இறக்குமதிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என ஆப்பிள் கேட்டு கொண்டுள்ளது.

இந்திய பிரதமரின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ஆப்பிள் பிராண்டு ஐபோன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டால் மிகவும் சவாலான விலையில் அமையும் என்பதனால் ஐபோன் விற்பனை மேலும் அதிகரிக்கும் என கருதப்படுகின்றது.

மேலும் இந்தியாவில் ஆப்பிள் களமிறங்கினால் சாம்சங் மற்றும் சியோமி போன்ற நிறுவனங்களுக்கு அளித்துள்ளதை போன்ற சலுகைகளும் அளிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே அடுத்த சில வாரங்களில் இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் தொழிற்சாலை அமைய வாய்ப்புள்ளதா எவ்வளவு விலையில் ஆப்பிள் மொபைல்கள் கிடைக்கலாம் போன்ற விபரங்கள் தெரியவரும்.

முதற்கட்டமாக பாகங்களை தருவித்து பெங்களூரில் ஒருங்கிணைக்கப்பட உள்ளது. அதனை தொடர்ந்து இந்தியவிலே பாகங்களை உற்பத்தி செய்யவும் வாய்ப்புகள் உள்ளது.

தொடர்ந்து இணைந்திருங்கள் கேட்ஜெட்ஸ் தமிழன் தளத்துடன்……