ஆப்பிள் ஐபேட் ஏர் மாடலுக்கு மாற்றாக புதிய 9.7 இன்ச் திரையை பெற்ற ஆப்பிள் ஐபேட் ரூ.28,900 ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியானதை தொடர்ந்து இந்தியாவில் ப்ளிப்கார்ட் தளத்தில் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஆப்பிள் ஐபேட் (2017) முன்பதிவு ஆரம்பம்

ஆப்பிள் ஐபேட் (2017)

கடந்த மாதம் சர்வதேச அளவில் விற்பனைக்கு வெளியிடப்பட்ட மாடல் தற்பொழுது இந்திய சந்தைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய ஐபேட் ஏர் மாற்றாக பல சிறப்பம்சங்களை பெற்ற டெப்ளெட்டாக வந்துள்ள இதில் முந்தைய A8X சிப்களுக்கு மாற்றாக புதிய 64-bit A9 பிராஸசர் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஆப்பிள் ஐபேட் (2017) முன்பதிவு ஆரம்பம்

புதிய 9.7 அங்குல ஆப்பிள் ஐபேட் மாடல் ஸ்மார்ட் ரெட்டினா திரையுடன் கஸ்டமைஸ் செய்யப்பட்ட 1.3 மில்லியன் ஆப்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இருவிதமான வேரியண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் விலை விபரம் இதோ..

  • Wi-Fi மாடல் – ரூ. 28,900
  • Wi-Fi+Cellular – ரூ. 39,900

மேலும் கூடுதலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள பாலியூரேதேன் டேப்ளெட் சிறப்பு ஸ்மார்ட் கவர்கள் விலை ரூ.3,700 ஆகும். இதன் வண்ணங்கள் கிரே, வெள்ளை, நீளம் மற்றும் பிங்க் ஆகும்.

முன்பதிவு செய்துகொள்ள ப்ளிப்கார்ட் தளத்தை பார்வையிடுங்கள்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here