2017 சர்வதேச மொபைல் காங்கிரஸ் அரங்கில் அறிமுகம் மோட்டோ ஜி வரிசை மொபைலில் வந்துள்ள மோட்டோ G5 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் மற்றும் நுட்ப விபரம் , விலை போன்ற விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

இந்தியாவில் மோட்டோ G5 மொபைல் மார்ச் 15 முதல் #MWC17

லெனோவா நிறுவனத்தின் அங்கமாக செயல்படுகின்ற  மோட்டோ G5 கருவியில் மொத்தம் 3 விதமான ரேம் ஆப்ஷனில் இருவிதமான இன்ட்ரனல் மெம்மரியுடன் வருகின்ற மார்ச் 15ந் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.  ஜி5 கருவியுடன் ஜி5 பிளஸ் மாடலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

மோட்டோ G5

ஆண்ட்ராய்டு நெளகட் 7.0 இயங்குதளத்தில் செயல்படுகின்ற ஜி5 பிளஸ் கருவியில்  5.2 முழு ஹெச்டி திரையுடன்  க்வால்காம் ஸ்னாப்டிராகன் 430 SoC, இணைந்து செயல்படுகின்ற வகையில் மொத்தம் 3 விதமான ரேம் ஆப்ஷனுடன் விளங்குகின்றது.  2GB,  3GB மற்றும் 4GB ரேம் ஆப்ஷன்களுடன்  16GB மற்றும் 32 GB என இருவிதமான சேமிப்பு அமைப்புகளை பெற்றுவிளங்குகின்றது.

மோட்டோ G5 கருவியில்  13 மெகாபிக்சல் ரியர் கேமரா மற்றும்  5 மெகாபிக்சல் முன்புற கேமரா ஆப்ஷனை பெற்றுவிளங்குகின்றது.

இந்தியாவில் மோட்டோ G5 மொபைல் மார்ச் 15 முதல் #MWC17

G5 ஸ்மார்ட்போனில் 2800mAh திறனை கொண்டுள்ள நீக்கும் வகையிலான பேட்டரியை பெற்றிருப்பதுடன்  மோட்ரோலா டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்தின் வாயிலாக விரைவாக சார்ஜ் ஏறும் அமைப்பினை பெற்று விளங்குகின்றது.

ஜி5 விலை

வருகின்ற மார்ச் 15 ,2017 அன்று இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள மோட்டோ ஜி5 விலை ரூ. 13,500 ஆக இருக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here