யூடியூப் வீடியோ தளத்தில் ஸ்மார்ட் ஆஃப்லைன் எனப்படும் குறைந்த டேட்டாவில் யூடியூப் வீடியோக்களை பார்க்கும் வசதியை இந்தியாவில் யூடியூப்  அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் யூடியூப் ஸ்மார்ட் ஆஃப்லைன் வசதி அறிமுகம்

ஏர்டெல் மற்றும் டெலிநார் வாடிக்கையாளர்கள் முதற்கட்டமாக இந்த சேவையை பெற உள்ளனர் . இந்த வசதி வை-ஃபை சேவையில் இயங்காது. மிக குறைந்த டேட்டா செலவில் வீடியோவினை பார்க்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள சேவையை பெற புதிய யூடியூப் ஆப்யினை நிறுவ வேண்டும்.

இந்தியாவில் யூடியூப் ஸ்மார்ட் ஆஃப்லைன் வசதி அறிமுகம்

யூடியூப் ஸ்மார்ட் ஆஃப்லைன் வழிமுறைகள்

1. நீங்கள் பார்க்க விரும்பும் வீடியோவினை தேர்வுசெய்து அதனில் உள்ள ஆஃப்லைன் ஐகானை தேர்வு செய்ய வேண்டும்.

2. உங்கள் டேட்டா தன்மைக்கு ஏற்ப வீடியோ தரத்தினை தேர்வு செய்ய வேண்டும்.அதாவது லோ , மீடியம் அல்லது ஹெச்டி தரத்தில் வீடோயோ வேண்டுமா என தேர்வு செய்யலாம்.

3. தானாகவே இரவுநேரத்தில் குறைந்த டேட்டாவினை எடுத்துக்கொண்டு வீடியோ டவுன்லோட் ஆகிவிடும்.

4. காலையில் நீங்கள் அந்த வீடியோவினை எவ்விதமான தடங்கலும் இல்லாமல் தொடர்ச்சியாக கண்டு மகிழலாம்..

இந்த வசதியை பெற உங்கள் யூடியூப் மேம்படுத்தப்பட வேண்டும். முதற்கட்டமாக ஏர்டெல் மற்றும் டெலிநார் வாடிக்கையாளர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இன்டெக்ஸ் க்ளவுட் குளோரி 4G மொபைல் வாங்க ; இந்தியாவில் யூடியூப் ஸ்மார்ட் ஆஃப்லைன் வசதி அறிமுகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here