மிக வேகமாக வளர்ந்து வருகின்ற இந்தியாவின் இணைய பயன்பாட்டில் வாட்ஸ்அப் செயலியின் பயணர்கள் எண்ணிக்கை 200 மில்லியனாக உயர்ந்துள்ளதாக வாட்ஸ்ஆப் அறிவித்துள்ளது. வாட்ஸ்அப் சமீபத்தில் புதுவிதமான ஸ்டேட்டஸ் வசதியை அறிமுகம் செய்துள்ளது.

வாட்ஸ்அப்

சர்வதேச அளவில் 1 பில்லியனுக்கு மேற்பட்ட பயனர்களை கொண்டுள்ள வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு இந்தியாவில் தற்பொழுது 200 மில்லியன் பயனர்களை கடந்துள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த நவம்பரில் 160மில்லியன் இந்திய வாடிக்கையாளர்களை பெற்றிருந்த வாட்ஸ்ஆப் கடந்த மூன்று மாதங்களில் 40 மில்லியன் பயனர்களை பெற்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்து வாட்ஸ்ஆப் துனை நிறுவனர் பிரெயின் வாட்ஸ்ஆப் வாயிலாக 200 மில்லியன் பயனர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தை இணைப்பதில் மகிழ்ச்சி கொள்வதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் டிஜிட்டல் செயல்பாடு அதிகரித்து வருவதனால் அதற்கு ஏற்ப கூடுதல் முதலீட்டினை வாட்ஸ்ஆப்பில் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.

வாட்ஸ்அப் பேமென்ட் வசதி

வாட்ஸ்ஆப் செயிலில் பணம் செலுத்துதல் போன்ற சேவையை வழங்கும் நோக்கில் செயல்படும் வாய்ப்புகள் எதிர்காலத்தில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது.

வாட்ஸ்ஆப் புதிய ஸ்டேட்டஸ்

நேற்று வாட்ஸ் ஆப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய ஸ்டேட்டஸ் வாயிலாக படங்கள் , வீடியோ GIF மற்றும் எமோஜி போன்றவற்றை வைக்க இயலும்.