இன்ஃபோகஸ் 40 இன்ச் ஹெச்டி எல்இடி டிவி விற்பனைக்கு அறிமுகம்

  Ads
  அமெரிக்காவின் இன்ஃபோகஸ் நிறுவனம் இந்திய சந்தையில் சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ள நிலையில் புதிய இன்ஃபோகஸ் 40 இன்ச் ஹெச்டி எல்இடி தொலைக்காட்சியை ரூ.23,990 விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

  இன்ஃபோகஸ் நிறுவனம் ரூ.9,999 விலை முதல் ரூ.69,999 வரையில் என மொத்தம் 5 ஹெச்டி எல்இடி டிவிக்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகின்றது. தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள  40 இன்ச் ஃபுல் ஹெச்டி தொலைக்காட்சியில் சிறப்பான கான்டரெஸ்ட் மற்றும் ஸ்மார்ட் UV2A நுட்பத்தினை பெற்று சிறப்பான பார்க்கும் அனுபவத்தினை பெற்றுள்ளது.

  இன்ஃபோகஸ் எல்இடி டிவி வரிசை விலை பட்டியல்

  24 இன்ச் ஹெச்டி எல்இடி டிவி – ரூ.9,999
  32 இன்ச் ஹெச்டி எல்இடி டிவி – ரூ.15,999
  40 இன்ச் ஃபுல் ஹெச்டி எல்இடி டிவி – ரூ.23,990
  50 இன்ச் ஃபுல் ஹெச்டி எல்இடி டிவி – ரூ. 34,999
  60 இன்ச் ஃபுல் ஹெச்டி எல்இடி டிவி – ரூ.69,999

  அனைத்து இன்ஃபோகஸ் எல்இடி தொலைக்காட்சிகளையும் சீனாவின் பிரசத்தி பெற்ற ஃபாக்ஸ்கான் நிறுவனம் தயாரிக்கின்றது. இந்தியாவில் ஸ்நாப்டீல் ,அமேசான் போன்ற தளங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. 40 இன்ச் எல்இடி டிவி எக்ஸ்குளூசிவாக ஃபிளிப்கார்ட் வாயிலாக விற்பனைக்கு கிடைக்கும்.

  Comments

  comments