இன்டெக்ஸ் நிறுவனம் புதிய ஐரிஸ்ட் புரோ என்ற பெயரில் ரூ.5,999 விலையில் ஸ்மார்ட் வாட்சினை ஃபிளிப்கார்ட் வழியாக பிரத்யேகமாக விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

இன்டெக்ஸ் ஐரிஸ்ட் புரோ வாட்ச் அறிமுகம்

மிக சிறப்பான பல வசதிகளை கொண்டுள்ள ஐரிஸ்ட் புரோ வாட்சில் தொடுதிரை கொண்ட கர்வ்டு கிளாஸ் பயன்படுத்தியுள்ளனர். இதன் திரை அளவு 1.6 இஞ்ச் (240X240 pixels ) ஆகும்.   இதன் இன்டர்னல் சேமிப்பு வசதி 64 MB ஆகும். இதில் MediaTek MT2502C புராஸசெசர் கொண்டும் இயங்கும் வகையில் 128 MB ரேம் பெற்றுள்ளது.

பூளூடூத் 4.0 வழியாக ஆண்டராய் 4.3 ஓஎஸ் மற்றும் அதற்க்கு மேற்பட்ட இயங்குதளங்களில் இயங்கும் மற்றும் ஐஓஎஸ் 7 மற்றும் அதற்க்கு மேற்பட்ட இயங்குதளங்களில் இயங்கும். இதன் பேட்டரி சார்ஜ் செய்யும் வசதி கொண்டதாகும். இதன் சார்ஜ் சேமிப்பு 400mAh ஆகும்.

இன்டெக்ஸ் ஐரிஸ்ட் புரோ வாட்சில் கால் இணைப்பு , எஸ்எம்எஸ் , எம்எம்எஸ் அறிவிப்புகள் , கால் டிராக் , கேமரா இயக்க மற்றும் பாடல்களை மாற்ற என பல சிறப்பு வசதிகளை பெற்றுள்ளது.

ஃபிளிப்கார் வழியாக எக்ஸ்குளூசிவ் சலுகையாக ரூ.4,999 விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

வாங்குவதற்கான இணைப்பு ; i rist pro buying

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here