உலகம் இரவில் எவ்வாறு மின் விளக்கில் ஒளிருகின்றது என்பதனை ஆய்வு செய்து வரும் நாசா இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

இரவில் உலகம்

நாசா உலக நாடுகளில் காலநிலை மற்றம் பருவ நிலை மாற்றம்,இயற்கை பேரிடர் குறித்த தகவல்களை பெற 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை உலக வரைபடத்தினை புகைப்படங்களாக எடுத்து கடந்த 25 வருடஙகளாக வெளியிடுகிறது. இந்நிலையில் கடந்த 2012 முதல் 2016-ம் ஆண்டு கால இடைவெளியில் உலக வரைபட வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது.

கடந்த 2012 முதல் தினமும் எவ்வாறு இரவில் மனிதர்களின் பயன்பாட்டில் உலகம் ஒளி வெள்ளத்தில் எவ்வாறு ஒளிருகின்றது என்பதனை ஆய்வு செய்து வருகின்ற நிலையில் முதன்முறையாக நாசா வெளியிட்டுள்ளது.

இந்த ஆய்வின் வாயிலாக நகரங்களில் மக்கள் எவ்வளவு ஒளியை பயன்படுத்துகின்றனர் என்பதனை அறியவும் , பொருளாதார செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்கு மற்றும் பேரழிவு காலங்களில் உதவி வழங்கும் வகையில் உருவாக்க திட்டமிட்டு வருகின்றது.

கடந்த 2011 முதல் நாசா இரவில் ஒளி வெளியிடும் அளவு மற்றும் முக்கிய தகவல்களை ஆய்வு செய்து வருகின்றது. மேலும் இந்த ஆண்டின் இறுதிக்குள் தினமும் எவ்வாறு உலகம் இரவில் ஒளி விளக்குகளில் மின்னகிறது என்பதனை வெளியிட திட்டமிட்டு வருகின்றது.