தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சார்பில் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை டிராய் வழங்கியதை தொடர்ந்து இலவச செட்டாப் பாக்ஸ் விரைவில் வழங்கப்படும் என தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தெரவித்துள்ளார்.

அரசு கேபிள் செட்டாப் பாக்ஸ்

அரசு கேபிள் நிறுவனத்திற்கு டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையயை டிராய் வழங்கியதை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பாக செட்டாப் பாக்ஸ் பெறுவதற்கான டென்டர் விடப்பட்ட நிலையில் இன்றைய  சட்டப்பேரவை கூட்டத்தில் இது குறித்து பேசிய அமைச்சர் மணிகண்டன் கூறியதாவது

விரைவில் இலவச அரசு கேபிள் டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ் வழங்கப்படும் என்றும், மேலும் அரசு இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டு இதனால் பொதுமக்களுக்கும் அரசுக்கும் இடையேயான உறவு மேலும் வளர்த்திட உதவும் என்றார்.

மக்கள் தங்கள் கருத்துக்களை அரசுக்கு தெரிவிக்கும் வகையில் இந்த இணையதளம் செயல்படும். ரூ.2.10 கோடியில் நமது அரசு இணையதளம் உருவாக்கப்படும் என்றார். ரூ.88.37 கோடி செலவில் கணினி கல்வி இல்லாத கிராம மக்களுக்கு 26.79 லட்சம் கிராம மக்களுக்கு கணினி பயிற்சி அளிக்கப்படும் என்று கூறினார்.

மேலும் நவீன தமிழ் உரைக்கான சிறந்த இலக்கணச் சரிபார்ப்பு மென்பொருள் உருவாக்கப்படும் என்றும் கணினி வழி கற்றலில் உள்ள ஐயப்பாடுகளை தீர்வு செய்ய இந்த மென்பொருள் உதவும், ஓசூரில் அமைக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப பூங்கா அடுத்த மாதம் திறக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த இலவச செட்டாப் பாக்ஸ்வாயிலாக ரூ.125 கட்டணத்தில் 130 தொலைக்காட்சி சேனல்கள் வழங்கப்படக்கூடும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா, அவர்களின் தேர்தல் அறிக்கையில் செட்டாப் பாக்ஸ்கள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார் என்பது இங்கே குறிப்பிடதக்கதாகும்.