அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கு ஏற்ப அளவுக்கு அதிகமான ஸ்மார்ட்போன் , டேப்ளெட் மற்றும் கணினி கருவிகளின் பயன்பாடு மிக விரைவாக இளம் வயதிலே முதுமை தோற்றத்துக்கு ஆளாக நேரிடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

உங்கள் இளமையை இழக்கபோறிங்களா ? அதிகம் பயன்படுத்தாதீங்க - அதிர்ச்சி ரிபோர்ட்

மின்சாதன கருவிகளின் பயன்பாடு நவநாகரிக இளையோரிடம் அளவுக்கு மிகுந்து இருப்பதனால் இவர்கள் விரைவாக வயதானோர்களுக்கு இணையான தோற்ற பொலிவுக்கு தள்ளப்படும் அபாயம் உள்ளதை மருத்துவர்கள் உறுதிசெய்துள்ளனர்.

ஸ்மார்ட்போன் , டேப்ளெட் மற்றும் கணினி போன்றவற்றை அதிகமாக பயன்படுத்துவதனால் பலதரப்பட்ட பிரச்சனைகளுக்கு குறிப்பாக அதிகநேலம் குனிந்து பணியாற்றும் கட்டாயத்துக்கு தள்ளப்படுவதனால் முதுகு தண்டில் பாதிப்புகளுடன் முதுகு தண்டு வளைந்திடும் ,  கழுத்து மற்றும் தோள்பட்டைகள் , எழும்பு  மூட்டு , கைவிரல்கள் , தலை , கை போன்ற பகுதிகளில் பாதிப்பு அதிகமாக ஏற்படுதவதாக மும்பை ஃபோர்டீஸ் மருத்துவமனை அழகு அறுவை சிகிச்சை நிபுணர் வினோத் விஜி தெரிவித்துள்ளார்.

உங்கள் இளமையை இழக்கபோறிங்களா ? அதிகம் பயன்படுத்தாதீங்க - அதிர்ச்சி ரிபோர்ட்

இந்திய இணையம் மற்றும் மொபைல் சங்கம் ( Internet and Mobile Association of India – IAMAI ) சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இணையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை ஜூன் 2016 இறுதியில் 371 மில்லியனாக தொடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனில் 40 % பங்கினை 19 வயது முதல்  30 வரையிலான வயதில் உள்ளோர்களாக இருப்பார்கள் என தெரிவித்துள்ளது.

அதிகப்படியான பயன்பாடு கர்ப்பப்பை வாய் முதுகெலும்பு, வளைவு, ஆதரவு தசைநார்கள், தசை நாண்கள் மற்றும் தசைகளில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி மிக விரைவாக வயதான தோற்றத்தினை பெறுவதாக தெரிவித்துள்ளது.

பெரும்பாலான இளைய தலைமுறையினர் கேட்ஜெட்ஸ் பாதிப்புகளை பற்றி பெரிதாக விழிப்புணர்வு இல்லாமல் உள்ளனர். அதன் காரானமாகவே கழுத்து வலி , கழுத்து தசைகளில் வழி , முகத்தில் சுருக்கம் போன்றவை வரக்காரணமாக உள்ளதாக  அழகுக்கான அறுவை சிகிச்சை நிறுவனம் (Cosmetic Surgery Institute) மூத்த அழகு அறுவை சிகிச்சை நிபுணர் மோகன் தாமஸ் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி உங்கள் கருத்து என்ன மறக்காமல் பதிவு செய்யுங்க…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here