உமர் கய்யாம்

பாரசீக கவிஞராக அறியப்படுபவர் உமர் கய்யாம் (Omar Khayyam), 971வது பிறந்த நாளை முன்னிட்டு கூகுள் டூடுல் வெளியிடப்பட்டுள்ளது. ஓமர் கய்யாம் கவிஞர் மட்டுமல்ல மெய்யியலாளர், கணிதவியலாளர் மற்றும் வானியியல் தொடர்பான துறையிலும் சிறந்த விளங்கியவர் ஆவார்.

வடகிழக்கு ஈரான் நாட்டில் உள்ள நிசாபூர் என்ற நகரில் உமர் மே 18, 1048 ஆம் ஆண்டு பிறந்தார். கய்யாமின் கவிதைகள் இன்றைக்கு உலகயளவில் பிரபலமாக விளங்குகின்றது.

உமர் கய்யாம் 971வது பிறந்த நாள்

ஓராண்டு என்பது 365.24219858156 நாட்கள் என்பதனை மிகத் துல்லியமாக கணக்கிட்டவர், கணிதவியலில் இவருடைய பங்களிப்பு மிக முக்கியமானதாக விளங்குகின்றது. குறிப்பாக இவருடைய இயற்கணிதப் புதிர்கள் தொடர்பான ஆய்வுக்கட்டுரை மிக முக்கியமானதாகும்.

  • ஒமர் கய்யாம் என அழைக்கப்ப்படுகின்ற இவரின் முழுப்பெயர் கியாஸ் ஒத்-தீன் அபொல்-ஃபத் உமர் இபின் எப்ராகிம் கய்யாம் ஆகும்.
  • கய்யாம் என்பதற்கான பொருள் ‘கூடாரம் செய்பவன்‘
  • கூடாரம் செய்யும் குடும்பத்தில் பிறந்த இவரின் திறமையால் கவிஞர், மெய்யியலாளர், கணிதவியலாளர் மற்றும் வானியியலாளர் என புகழப்படுகிறார்.
  • ஆனால் தனது கவிதை மூலமே உலகளவில் பேசப்பட்டார்.
  • இவர் இயற்றிய செய்யுட்களுக்கு, ‘ருபாய்த்’ என்று பெயர். ‘ருபாய்த்’ என்றால் நான்கடிச் செய்யுள் என்று பொருள்.
  • இவரது நான்குவரிக் கவிதைகளை ஆங்கில எழுத்தாளர் எட்வர்டு ஃபிட்ஸ்ஜெரால்டு மொழிபெயர்த்து, ‘ரூபயாத் ஆஃப் உமர் கய்யாம்’ என்ற கவிதைத் தொகுப்பாக 1859-ல் வெளியிட்டார்.
  • இவரது பாரசீகப் பாடல்களைக் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.
  • உமர் தனது 83 வயதில் ( டிசம்பர் 4, 1131) மறைந்தார்

971வது பிறந்த நாளில் கூகுள் வெளியிட்டுள்ள டூடுலில் கவிதைகளுக்கான திராட்சை, கணிதவியில், வானியியல் தொடர்பான அவருடயை திறனை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.

உமர் கய்யாம் தனது பன்முகத்திறனால் தொடர்ந்து தனது கவிதை மூலம் புகழை அடுத்த ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்திருப்பார்..!