உலகளாவிய வலை என்றால் என்ன ? அறிய வேண்டிய சுவாரஸ்யங்கள்

இன்றைக்கு உலகளவாவிய வலையின் 30வது ஆண்டு விழா கொண்டாடப்படும் நிலையில், உலகளாவிய வலை என்றால் என்ன ? உருவாக்கியவர் பற்றி சில முக்கிய சுவாரஸ்யங்களை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

Vague but exciting (தெளிவற்ற ஆனால் அற்புதமான) என்ற மூன்று எழுத்து வார்த்தையை நீங்கள் அதிகமான வோர்ல்டு வைட் வெப் அலசலின் போது கிடைக்கப்பெறும். இதுதான் சர் டிம் பெர்னர்ஸ் லீ கிடைத்த முதல் அங்கீகாரமாகும். இன்றைக்கு அவர் வெளியிட்டுள்ள 30வது ஆண்டுவிழா கட்டுரையின் தொடக்கத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

உலகளாவிய வலை என்றால் என்ன ? அறிய வேண்டிய சுவாரஸ்யங்கள்

உலகளாவிய வலை என்றால் என்ன ?

இணையம் வேறு உலகளாவிய வலை என்பது வேறு என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும், பிரவுசர் வழியாக வலைதள பக்கங்களை நாம் பார்க்கும் வகையில் உருவாக்கப்பட்டதே ஆங்கிலத்தில் World Wide Web எனவும் தமிழில் உலகளாவிய வலை என குறிப்பிடப்படுகின்றது.

உலகளாவிய வலையில் மொத்தம் மூன்று பாகங்கள் உள்ளன. உரலி URL (uniform resource locator) , அடுத்து மீயுரை HTTP (hypertext transfer protocol) மற்றும் கணினியில் நாம் காண உதவும் மீயுரை குறியீடு மொழி அதாவது இன்று நாம் காண்கின்ற இணையத்தின் பின்புலமாக உள்ள HTML (hypertext markup language) என இந்த மூன்றையும் உள்ளடக்கியதே WWW ஆகும். இதனை நாம் வெப் பிரவுசர் மூலம் அனுக முடிகின்றது.

உலகளாவிய வலை என்றால் என்ன ? அறிய வேண்டிய சுவாரஸ்யங்கள்

உலகளாவிய வலையின் சில சுவராஸ்ய தகவல்கள்

1989 ஆம் ஆண்டு மார்ச் 12ந் தேதி வேர்ல்டு வைடு வெப் எனப்படுகின்ற உலகளாவிய வலையின் முதல் மாதிரியை ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (CERN) டிம் பெர்னர்ஸ் லீ சமர்பித்தார். இதனை சோதித்து பார்த்த CERN தலைவர் மைக் சேன்டால் கூறிய வார்த்தையே Vague but exciting (தெளிவற்ற ஆனால் அற்புதமான) ஆகும்.

ராபர்ட் கைலியுடன் என்பவருடன் டிம் இணைந்து நெக்ஸ்ட் கம்பியூட்டரில் முதல் வலைதளத்தை உலாவியில் (பிரவுசர்) மூலம் அனுகும் வகையில் 1991 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ந் தேதி Info.cern.ch என்ற வலைதள முகவரியில் அதிகார்வப்பூர்வமாக ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.

இன்றைக்கும் நீங்கள் உலகின் முதல் வலைதளத்தின் பக்கத்தை இந்த முகவரியில் படிக்கலாம் –> http://info.cern.ch/hypertext/WWW/TheProject.html

டிம் அவர்கள் உருவாக்கிய முதல் உலாவி அதாவது பிரவுசர் பெயரும் WorldWideWeb ஆகும். அதன் பிறகே Mosaic என்ற பிரவுரும் அதனை தொடர்ந்து பிரசத்தி பெற்ற இன்டர்நெட் எக்ஸ்புளோர் பிரவுசர் அறிமுகமானது.

இணையத்தில் முதன்முறையாக புகைப்படம் ஒன்றை வலைதளத்தில் 1992 ஆம் ஆண்டு ஜூலை 18ந் தேதி டிம் அவர்கள் மைக்கேல் என்பவரின் உதவியுடன் பதிவிட்டார். Les Horribles Cernettes எனப்படும் பேன்ட் குழுவினரின் படமாகும்.

உலகளாவிய வலை என்றால் என்ன ? அறிய வேண்டிய சுவாரஸ்யங்கள்

1993 ஆம் ஆண்டில் ஏப்ரல் 30 ஆம் தேதி அனைவருக்கும் உலகளாவிய வலை இலவசமாக வழங்கப்படும் என ஐரோப்பிய அணு ஆராய்ச்சி மையம் அறிவித்தது.

1994 ஆம் ஆண்டு CERN நிறுவனத்தை விட்டு வெளியேறிய டிம் பெர்னர்ஸ் லீ அவர்கள் சர்வதேச அளவில் இணையத்தை ஒரே மாதிரியாக உருவாக்க அடிப்படை கோட்பாடுகளை வடிவமைக்க World Wide Web Consortium (W3C) என்ற மையத்தை தொடங்கினார்.

இணையம் இன்றைக்கு மிக்ப்பெரிய அளவில் மாற்றத்தைக் கண்டிருந்தாலும் நன்மைகளை விட தீயவைகள் , போலி செய்திகள் போன்றவற்றின் அதிகரிப்பின் காரணமாக உலகளாவிய வலை அமைப்பினை உருவாக்கிய டிம் பெர்னர்ஸ் லீ கவலை கொண்டுள்ளார் என்பதே அவருடைய இன்றைய கட்டுரையின் மூலம் தெரிவித்துள்ளார்.

மேலும் நமது தளத்தில் — > உலகளாவிய வலையின் செய்திகள் படிக்கலாம்

உலகளாவிய வலை என்றால் என்ன ? அறிய வேண்டிய சுவாரஸ்யங்கள்