உலகின் சிறந்த ஸ்மார்ட்போன்கள் – 2017 Q1

உலகளவில் ஸ்மார்ட்போன் சந்தை நாளுக்குநாள் மிக வேகமாக வளர்ந்து வருகின்ற நிலையில் 2017ஆம் வருடத்தின் முதல் காலாண்டின் முடிவில் ஆப்பிள் ஐபோன் 7 உலகின் சிறந்த ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெற்றுள்ளது.

உலகின் சிறந்த ஸ்மார்ட்போன்

உலகம் முழுதும் முதல் காலாண்டு எனப்படும் ஜனவரி முதல் மார்ச் வரையிலான மாதங்களில் 35.3 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய வருடத்தை விட 4.3 சதவிகித வளர்ச்சியாகும்.

1. ஆப்பிள் ஐபோன் 7

உலக அரங்கில் அதிகம் விற்பனையாகின்ற சிறந்த ஸ்மார்ட்போனாக முதலிடத்தை பெற்றுள்ள ஆப்பிள் ஐபோன் 7 மொபைல் விற்பனை எண்ணிக்கை 2.15 கோடி ஆகும். மொத்த உலக ஸ்மார்ட்போன் சந்தையில் 6.1 சதவிகித பங்களிப்பை பெற்றுள்ளது.

2. ஆப்பிள் ஐபோன் 7 ப்ளஸ்

இரண்டாவது இடத்தில் ஆப்பிள் ஐபோன் வரிசையில் இடம்பெற்றுள்ள மற்றொரு மாடலான ஐபோன் 7 ப்ளஸ் விற்பனை எண்ணிக்கை 1.74 கோடியை எட்டியுள்ளது. மொத்த உலக ஸ்மார்ட்போன் சந்தையில் 4.9 சதவிகித பங்களிப்பை பெற்றுள்ளது.

3. ஓப்போ R9S

சீனாவின் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளான ஒப்போ முதல் காலாண்டில் 89 லட்சம் ஓப்போ R9S ஸ்மார்ட்போன்களை சர்வதேச அளவில் விற்பனை செய்துள்ளது. உலக ஸ்மார்ட்போன் சந்தையில் 3 சதவிகித பங்களிப்பை பெற்றுள்ளது.

4. சாம்சங் J3

சாம்சங் நிறுவனம் முதல் காலாண்டில் 61 லட்சம் ஜே3 ஸ்மார்ட்போன்களை சர்வதேச அளவில் விற்பனை செய்துள்ளது. உலக ஸ்மார்ட்போன் சந்தையில் 1.7  சதவிகித பங்களிப்பை பெற்றுள்ளது.

 

5. சாம்சங் J5 

முதல் காலாண்டில் 50 லட்சம் சாம்சங் ஜே5 ஸ்மார்ட்போன்களை சர்வதேச அளவில் விற்பனை செய்துள்ளது. உலக ஸ்மார்ட்போன் சந்தையில் 1.4 சதவிகித பங்களிப்பை பெற்றுள்ளது.

 

Recommended For You