ஹெச்பி ஸ்பெக்ட்ர் 13 லேப்டாப்பில் 13.3 இன்ச் ஃபுல் ஹெச்டி திரையுடன் 4 லேயர் கொண்ட கார்னிங் கொரில்லா கிளாஸ் உடன் கூடிய விண்டோஸ் 10 இயங்குதளதளத்துடன் இன்டெல் 6வது தலைமுறை கோர் i7 பிராசஸர் உடன் இணைந்த இன்டெல் ஹெச்டி கிராஃபிக்ஸ் பெற்று 8GB யில் LPDDR3-1866MHz ரேம் பெற்று SSD சேமிப்பு 512GB பெற்றுள்ளது.
1.11 கிலோகிராம் எடையுள்ள ஹெச்பி ஸ்பெக்ட்ர் லேப்டாப்பில் அடிப்பகுதியில் கார்பன் ஃபைபர் மற்றும் அலுமினியம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. 4-cell 38Whr பேட்டரியை பெற்றுள்ள லேப்டாப் முழுமையாக சார்ஜ் செய்தால் 9.5 மணிநேரம் வரை பேட்டரியை பெற்றிருக்கும்.
வருகின்ற ஜூன் 25 முதல் விற்பனைக்கு கிடைக்க உள்ள ஹெச்பி ஸ்பெக்ட்ர் 13 லேப்டாப் விலை ரூ.1,19,900 ஆகும்.
உலகின் மிக மெல்லிய லேப்டாப் வரிசையில் ஹெச்பி ஸ்பெக்ட்ர் 10.4 மிமீ
முந்தைய மாடலாக ஆப்பிள் மேக்புக் ஏர் 13.2 மிமீ அளவினை பெற்றிருந்தது.