உலகின் மிக வேகமான சூப்பர் கம்ப்யூட்டர் ஒன்றை சீனா உருவாக்கியுள்ளது. சீனா உருவாக்கியுள்ள சூப்பர் கம்ப்யூட்டர் சிறப்பு என்னவென்றால்  எந்த நாட்டின் துனையும் இல்லாமல் சீனா நாட்டின் பொருட்களை கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா அல்லாத முதல் நாடு சூப்பர் கம்ப்யூட்டர் வடிவமைப்பில் முதலிடத்தினை பிடிப்பதே இதுவே முதல்முறையாகும்.  இந்த சூப்பர் கம்ப்யூட்டர் சீனாவில் உள்ள சீனா தேசிய சூப்பர் கம்ப்யூட்டர் மையத்தில் அமைந்துள்ளது. சீனா உள்நாட்டிலே அனைத்து சிப்களும் உருவாக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

 முந்தைய சூப்பர் கம்ப்யூட்டர் செயல்திறனை விட இரு மடங்கு கூடுதல் வேகமாக சன்வே தாய்ஹூலைட் (sunway taihulight) செயல்படுகின்றது என அமெரிக்கா மற்றும் ஜெர்மன் பெஞ்ச் டெஸ்ட் சோதனையில் தெரியவந்துள்ளதாக சூப்பர்கம்ப்யூட்டர் சர்வே வெளியிடும் டாப்500 சர்வே தெரிவித்துள்ளது.

டாப் 10 சூப்பர் கம்ப்யூட்டர்களில் சீனா இரண்டு இடங்கள் , அமெரிக்கா 4 இடங்கள் , சீனா ,ஜப்பான் , சுவிட்சர்லாந்து மற்றும் சவூதி அரேபியா போன்ற நாடுகள் தலா ஒரு இடத்தினை பகிர்ந்து கொண்டுள்ளது.

10 % cashback offer with music earphones

சூப்பர் கம்ப்யூட்டர் சர்வே ஆண்டுக்கு இருமுறை வெளியிடப்பட்டு வருகின்றது. முதன்முறையாக அமெரிக்கா முதலிடத்தினை தவறவிட்டாலும் சீனா பல இலட்சம் கோடிகளை முதலீடுகளை கொண்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் முதன்மை வகிக்க திட்டமிட்டுள்ளது.