உலகின் மிக வேகமாக காப்பி செய்யும் வகையிலான சோனி SDகார்டு ரூ.6,700 ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகம் செயப்பட்டுள்ளது. ஏப்ரல் 3ந் தேதி முதல் சோனி எஸ்டி கார்டு சந்தையில் கிடைக்கும்.

சோனி SDகார்டு

  • உலகின் மிக வேகமாக காப்பி செய்யும் வசதியை கொண்ட சோனி SDகார்டு விலை ரூ.6,700
  •  32GB, 64GB, மற்றும் 128GB போன்ற வகைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  • புதிதாக விரைவாக காப்பி செய்யும் வகையிலான கார்டு ரீடர் அறிமுகம்

மிகவும் உயர்தரமான படங்கள் மற்றும் வீடியோவினை மிக துல்லியமாக பதிவு செய்யும் வகையிலான திறன்களையும் இந்த கார்டுகள் பெற்றுள்ளன. புகைப்பட கலைஞர்களுக்கு ஏற்ற இந்த எஸ்டி கார்டுகள் UHS-II போன்ற உயர்தர படங்களை சேமிக்கவும் உதவும் வகையில் புதிய எஸ்டி கார்டுகள் கிடைக்கும்.

சோனி SF-G வரிசை எஸ்டி கார்டுகள் அதிகபட்சமாக 300MBps வேகத்தில் தகவல்களை காப்பி செய்ய பயன்படுத்தலாம்.

  • SF-G32/T1 எஸ்டி அட்டை (32GB)  ரூ. 6,700,
  • SF-G64/T1 எஸ்டி அட்டை (64GB) – ரூ. 11,000
  • SF-G128/T1 எஸ்டி அட்டை (128GB) – ரூ. 19,900

இந்த மெமரி கார்டுகளுக்கு 5 வருட வாரண்டி வழங்கப்பட்டுள்ளது.

கூடுதலாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள கார்டு ரீடர் சிறப்பான வேகத்தில் தகவல்களை பரிமாறிக் கொள்ளும் வகையில் அமைந்திருக்கும்.

MRW-S1/T1 கார்டு ரீடர் விலை ரூ. 2,300 . இதற்கு  ஒரு வருட வாரண்டி வழங்கப்பட்டுள்ளது.