டெல் லாட்டிட்யூட் 7285 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஹைபிரிட் லேப்டாப் உலகின் முதல் வயர்லெஸ் சார்ஜிங் நுட்பத்துடன் 2 இன் 1 மடிக்கணினி ஆகும்.

வயர்லெஸ் சார்ஜிங் டெல் லேப்டாப்

கடந்த ஜனவரி மாதம் 2017 CES அரங்கில் காட்சிப்படுத்தப்பட்ட 2 இன் 1 ஹைபிரிட் அம்சத்தை பெற்ற டெல் நிறுவனத்தின் டெல் லாட்டிட்யூட் 7285 வரிசை மடிக்கணினி அமெரிக்காவில் $ 1199 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

மடிக்கணினி திரை மற்றும் கீபோர்டு போன்றவற்றுக்கு தனியான பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த மடிக்கணினியை சார்ஜிங் சமயத்தில் கைகளில் வைத்திருப்பது மற்றும் மெட்டல் மீது வைத்திருந்தாலும் மிகுந்த ஆபத்து என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மடிக்கணினி தனியாகவும் மற்றவை வயர்லெஸ் சார்ஜிங் கீ போர்டு மற்றும் சார்ஜிங் மேட் போன்றவை முறையே $379.99 மற்றும் $199.99 ஆகிய விலைகளில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. இந்த கீபோர்டு 4 மணி நேரம் வரை சார்ஜ் தாங்கும் திறன் கொண்டதாக வந்துள்ளது.

12 அங்குல திரை பெற்றுள்ள டெல் லாட்டிட்யூட் 7285 லேப்டாப்பில் 2880×1920 பிக்சல் தீர்மானத்ததுடன் இன்டெல் கோர் i5-7Y54 பிராசஸருடன் கூடிய  8GB மற்றும் 16GB என இரண்டு ரேம் ஆப்ஷன்களுடன் 512GB வரையிலான மாறுபட்ட சேமிப்பை வழங்குகின்றது.

வரும் ஆகஸ்ட் மாதம் முதல் லாட்டிட்யூட் 7285 விற்பனைக்கு கிடைக்க உள்ளது.