விலை மலிவான பிரீடம் 251 மொபைல் 5000 நபரங்களுக்கு முதற்கட்டமாக டெலிவரி கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்த சில வாரங்களில் முன்பதிவு செய்த அனைவருக்கும் டெலிவரி தொடங்க உள்ள நிலையில் ரிங்கிங்பெல்ஸ் நிறுவனத்தின் மற்ற மொபைல்போன்கள் மற்றும் பவர்பேங்குகள் போன்றவை 48,000 ஆர்டர்கள் பெற்றுள்ளதாக ரிங்கிங் பெல்ஸ் தலைமை செயல் அதிகாரி மோஹித் கோயல் தெரிவித்துள்ளார்.
வருகின்ற ஜூலை 14ந்தேதி மேற்கு உத்திரபிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள சாம்லி மாவடத்தில் உள்ள கர்கிபுக்ஹ்தா என்ற ஊரில் உள்ள 200 முன்பதிவுகளை பெற்றுள்ள பிரீடம் 251 மொபைலை ரிங்கிபெல்ஸ் சிஇஓ நேரடியாக டெலிவரிசெய்ய திட்டமிட்டுள்ளார். அது மோஹித் கோயல் பூர்வீக ஊராகும்.
வருகின்ற ஜூலை 25ந்தேதி நோய்டாவில் பாலிவுட் பட்டாளங்களை கொண்டு பிரீடம் 9900 எல்இடி டிவியை பிரபலப்படுத்தும் நோக்கில் வரவுள்ள புதிய பாலிவுட் படமான டிஸ்யூம் படத்தின் நடிகர் , நடிகைகளான ஜான் அபிரகாம் , வருன் தவான் , ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் அக்ஷ்ய் கண்ணா போன்றவர்களை கொண்டு பிரமாண்டமான நிகழ்ச்சிக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதாம்.
வருகின்ற ஜூலை 26ந் தேதி முதல் முன்பதிவு தொடங்கப்பட உள்ள பிரீடம் 9900 எல்இடி டிவி ஆகஸ்ட் 15 முதல் டெலிவரி தொடங்கப்பட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் விலை மலிவான 31.5 இஞ்ச் எல்இடி தொலைக்காட்சி விலை ரூ.9,990 ஆகும்.