உலக அன்னையர் தினம் பற்றிய வரலாறு : கூகுள் டூடுல்

Ads

இன்றைய தினம் சர்வதேச அன்னையர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. அன்னையர் தினத்தை முன்னிட்டு கூகுள் தனது முகப்பில் 6 விதமான தோற்றத்தை வெளிப்படுத்தும் படத்தை வெளியிட்டுள்ளது.

அன்னையர் தினம் 2017

ஒவ்வொரு வருடமும் சர்வதேச அளவில் அன்னையர் தினம் மே 2வது ஞாயிற்று கிழமைகளில் கொண்டாடப்படுவது வழங்ககமான ஒன்றாகும், அதன் அடிப்படையிலே மே 14 ஆகிய இன்று கொண்டாடப்படுகின்றது. சர்வதேச அளவில் பல நாடுகளில் இந்த தினத்தைகொண்டாடும் நிகழ்வு அதிகரித்து வருகின்றது. நமது நாட்டின் தேசிய அன்னையர் தினம் ஆகஸ்ட் 19ந் தேதி கொண்டாடப்படுகின்றது.

வரலாறு

அமெரிக்காவைச் சேர்ந்த அன்னா மரியா ஜீவ்ஸ் ஜர்விஸ் என்பவரின் மகள் அன்னா மேரி ஜர்விஸ். தனது அம்மாவின் மீது கொண்ட அண்பின் காரணமாக குழந்தை இறப்பு விகிதத்தை குறைக்க முயற்சிகள் மேற்கொண்டனர்.

இதற்காக ”மதர்ஸ் டே ஒர்க் கிளப்” (Mothers’ Day Work Clubs) என்ற அமைப்பை உருவாக்கி அதன் வாயிலாக, தாய்மார்களுக்கு குழந்தை வளர்ப்பு, சுகாதாரம், கல்வி கற்பிப்பது போன்ற பல்வேறு விதமான பயிற்சிகளை அளித்து வந்தார்.

1876 ஆம் ஆண்டில் ஒருநாள் தனது தாய் நடத்தி வந்த ஞாயிற்றுக் கிழமை பள்ளியில், அன்னையைப் போற்றுவதற்கு ஒரு நாள் ”அன்னையர் தினம்” வரும் என்று பாடி இருந்தது.

இந்நிலையில் அவரது அம்மா 1905 ஆம் ஆண்டில் இறந்துவிட, அவரது அன்னையின் ஆசையை நிறைவேற்றும் வகையில், 25 ஆண்டுகளாக அவரது அம்மா போதித்து வந்த ஆண்ட்ரூஸ் சர்ச்சுக்கு, 1908 ஆம் ஆண்டு, மே 10ஆம் தேதி, அன்னையர்களை வரவழைத்து அவர்களுக்கு பூச்செண்டுகள் பரிசாக கொடுத்து அனுப்பினார். இதன் தொடக்கமாகவே அன்றைய தினத்தை அன்னையர் தினமாகவே கொண்டாடினார்.

அன்னையர் தினத்தை அறிவிக்க வேண்டும் என்று தொடர்ந்து அன்னா மேரி போராட்டம் நடத்தி வந்த நிலையில், அமெரிக்காவின் 28வது அதிபரான தாமஸ் வுட்ரூ வில்சன், அன்னையர் தினத்துக்கான பிரகடனத்தில் 1914, மே 9 ஆம் தேதி கையெழுத்திட்டார். இதையடுத்து, அன்னையர்களுக்கு மரியாதை, அன்பு செலுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மே 2வது ஞாயிறு அன்னையர் தினமாக கொண்டாடப்படும், அன்று தேசிய விடுமுறை விடப்படும் என்று அமெரிக்க அரசு அறிவித்தது.

இன்றைய கூகுள் டூடுல்

கூகுள் முகப்பில் வெளியாகியுள்ள டூடுல் குழந்தை வளர்ப்பின் 6 நிலைகளை குறிப்பிடும் வகையில் அமைந்துள்ளது. முதல் படம் கர்பத்தையும், இரண்டாவது படம் குழந்தைக்கு பால் தருவதை உணர்த்துவதாகவும், மற்றவை குழந்தையின் வளர்ப்பு பற்றி குறிப்பிடுகின்றது. இறுதியில் மகிழ்ச்சியான குடும்பம் என்பதனை உணர்த்துகின்ற வகையில் அமைந்துள்ள இந்த டூடுல் கள்ளிச்செடி குடும்பமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கூகுள் டூடுல் படத்தை கீழே காணலாம்.