உலகின் மிகச்சிறிய எலாரி நானோ போன் C (Elari Nano phone C) மாடலை இந்திய சந்தையில் ரூ. 3,940 விலையில் எர்கா தளத்தில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. 30 கிராம் எடை மட்டுமே எலாரி நானோ போன் சி பெற்றுள்ளது.

எலாரி நானோபோன் சி

ரஷ்யா நாட்டைச் சேர்ந்த எலாரி நிறுவனம் உருவாக்கியுள்ள உலகின் மிகச்சிறிய அதாவது கிரெடிட் கார்டு அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ள நானோ போன் சி எடை வெறும் 30 கிராம் மட்டுமே ஆகும்.

டிசைன் & டிஸ்பிளே

மிகவும் ஸ்டைலிஷனான பட்டன்களுடன் நேர்த்தியான வடிவமைப்பை பெற்றுள்ள இந்த எலாரி நானோபோன் சி அளவுகள் பின்வருமாறு – 94.4 மில்லிமீட்டர் நீளமும், 35.85 மில்லிமீட்டர் அகலமும் கொண்டுள்ள இந்த போன்  7.6 மில்லிமீட்டர் தடிமத்துடன,  30 கிராம் எடையில்  ‘நானோபோன் சி’ வடிவமைக்கப்பட்டுள்ளது.

கருப்பு, ரோஸ் கோல்டு, மற்றும் சில்வர் ஆகிய நிறங்களில் கிடைக்க உள்ள இந்த மொபைல் போனின் டிஸ்பிளே 1 அங்குல 128×96 பிக்சல் தீர்மானத்துடன் டிஎஃப்டி பெற்றதாக உள்ளது.

பிராசஸர்

ஆர்டிஓஎஸ் (RTOS-real-time operating system) இயங்குதளத்தால் இயக்கப்படுகின்ற மீடியாடெக் MT6261D பிராசஸர் பெற்று 32எம்பி ரேம் கொண்டு இயக்கப்படுகின்ற மொபைலில் 32எம்பி சேமிப்பு வசதியுன் கூடுதலாக 32ஜிபி வரை மைக்ரோ எஸ்டி அட்டையை பயன்படுத்தலாம்.

மற்றவை

280mAh பேட்டரி கொண்டு இயக்கப்படுகின்ற இந்த மொபைல் 4 மணி நேர டாக்டைம் மற்றும் 4 நாட்கள் வரையிலான பேட்டரி திறனை கொண்டிருக்கும். இரு ஜிஎஸ்எம் மைக்ரோ சிம் கார்டுகளை பயன்படுத்தும் ஸ்லாட்களுடன்,  எம்பி 3 பிளேயர், பன்பலை வானொலி, குரல் பதிவு, போன் அழைப்பு பதிவு மற்றும் அலாரம் போன்றவற்றுடன் கூடுதலாக ஹெட்போன் ஜாக், மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட் புளூடுத் போன்றவை இடம்பெற்றுள்ளது.

இதில் உள்ள புளூடுத் வாயிலாக புளூடுத் கருவி முதல் ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு மொபைல்களை இணைக்கலாம்.மேலும் ஒரே முயற்சியில் 1000 தொடர்புகளை நானோ போன் சி -க்கு நகலெடுக்கலாம். மேலும் இதில் உள்ள மேஜிக் வாய்ஸ் பயன்பாட்டின் மூலம் நண்பர்களுக்கு குரல் மாற்றி பேசலாம்.

எலாரி நானோ போன் சி விலை

ரூ. 3940 விலையில் கிடைக்கின்ற எலாரி நானோபோன் சி வாங்க Yehra.com தளத்தை அனுகலாம்.

இதுகுறித்து இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடதக்க அம்சமாக இந்த மொபைலை ஆண்டி-ஸ்மார்ட் (anti-smart) போன் என்ற பிரிவின் கீழ் சமூக வலைதளங்கள்,இணையம், போன்றவற்றில் இருந்து விலகி நிற்பவர்களுக்கு வடிவமைக்கப்பட்டுள்ள அழைப்பு மற்றும் டெக்ஸ்ட் செய்வதற்கான மொபைலாக விளங்கும் என குறிப்பிட்டுள்ளது.