இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள எல்ஜி ஜி6 ஸ்மார்ட்போனுக்கு முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்ய எவ்விதமான கட்டணமும் இல்லை.

எல்ஜி ஜி6

  • உலகின் முதல் டால்பி விஷன் மற்றும்  HDR10 நுட்பங்களை பெற்றதாக வந்துள்ளது.
  • கூகுள் அசிஸ்டென்ட் உள்பட பல நவீன வசதிகளை பெற்றதாக விளங்கும்.
  • முதன்முறையாக 2017 மொபைல் வோர்ல்டு காங்கிரஸ்அரங்கில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்தியாவின் அதிகார்வப்பூர்வ இணையதளமான எல்ஜி தளத்தில் முன்பதிவு தொடங்கபட்டுள்ளது. முதல்முறையாக 2017 மொபைல் வோர்ல்டு காங்கிரஸ் அரங்கில் அறிமுகம் செய்யப்பட்ட எல்ஜி G6 மொபைல் பல்வேறு விதமான வசதிகளை கொண்டதாக விளங்குகின்றது.

5.7  அங்குல QHD திரையுடன் வந்துள்ள இந்த கருவியில் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 821 Soc பிராசஸருடன் இணைந்த 4GB ரேம் உடன் இணைந்த 32GB மற்றும் 64GB வரையிலான உள்ளடங்கிய சேமிப்பை பெற்று விளங்குகின்றது.

இரட்டை கேமராக்கள் 13 மெகாபிக்சலுடன் அமைந்து சிறப்பான படங்கள் மற்றும் உயர்தர 4கே ஹெச்டி வீடியோக்களை தரும் வகையில் அமைந்துள்ளது. முன்புறத்தில் 5 மெகாபிக்சல் கேமரா அமைந்துள்ளது. OIS எனப்படும் சிறந்த படங்களை தர உதவும் அமைப்பும் பெற்று விளங்குகின்றது.

வாட்டர் ப்ரூஃப் , தூசியிலிருந்து பாதுகாக்கும் ரெசிஸ்டென்ட் , கைரேகை ஸ்கேனர் , ஆண்ட்ராய்டு 7.1 நெளகட் இயங்குதளத்தில் செயல்படுகின்ற எல்ஜி ஜி6 ஸ்மார்ட்போனில் Wi-Fi 802.11/b/g/n/ac, பூளூடுத் 4.2, ஜிபிஎஸ், 4G LTE, VoLTE, USB Type-C 2.0 மற்றும் என்எஃப்சி போன்றவை இடபெற்றுள்ளது.

இந்தியாவில் எல்ஜி ஜி6 ஸ்மார்ட்போன் ரூபாய் 51,500 ஆரம்ப விலையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.